பாடகி ஜானகியின் மகன் மறைவு : பேத்தி வெளியிட்ட அறிக்கை | புதிய படங்களுக்குப் போட்டியான 'மங்காத்தா' ரீரிலீஸ் | கான்ஸ்டபிள் கனகம் வெப் சீரிஸின் 3வது சீசன் திரைப்படமாக வெளியாகிறது | மீண்டும் மம்முட்டிக்கு ஜோடியாக நடிக்கும் பறந்து போ நடிகை | துரந்தர் முதல் நாள் கலெக்ஷனை ஓவர்டேக் செய்த ‛பார்டர் 2' | கல்கி 2 படம் குறித்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் வெளியிட்ட தகவல் | ஜனவரி 30ல் திரைக்கு வரும் வடிவுக்கரசியின் க்ராணி! | ஆமா, அந்த பாபு யாரு...? : ரவி மோகனினிடம் கேட்கப்படும் கேள்வி | மங்காத்தாவை கொண்டாடும் அஜித் ரசிகர்கள் | மெரினா பீச் பெயரை மாற்ற வேண்டுமாம் : காமெடி பண்ணும் புது ஹீரோ |

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கடந்த வாரம் சூர்யா நடிப்பில் ரெட்ரோ திரைப்படம் வெளியானது. 70 - 80களின் பின்னணியில் உருவான இந்த படம் காதல், ஆக்ஷன் என இரண்டும் சரிவிகிதத்தில் கலந்து உருவாகி இருந்தது. இந்த படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் ஆவ்னி என்கிற சிறுமி நடித்திருந்தார். அந்த படத்தில் தீ விபத்து சம்பந்தப்பட்ட காட்சி ஒன்றை படமாக்கும் போது அவருக்கு கைகளிலும் கண் புருவம் மற்றும் தலைமுடி ஆகியவற்றில் சின்ன சின்ன தீக்காயங்கள் ஏற்பட்டன. அதை பார்த்து பதறிப்போன படக்குழுவினர் அவரை சிகிச்சை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு சென்று ஓய்வு எடுக்கும்படி கூறினார்கள். ஆனாலும் அந்த சிறுமி அதை மறுத்துவிட்டு அடுத்தடுத்த காட்சிகளில் தொடர்ந்து துணிச்சலுடன் நடித்துக் கொடுத்தார்.
அதன் பிறகு கேரளாவில் நடைபெற்ற இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் அந்த சிறுமியை மேடைக்கு அழைத்து அவரின் துணிச்சலை நடிகர் சூர்யா பாராட்டி பேசினார். இந்த வீடியோ வெளியாகி வைரலானது. இந்த ஆவ்னி வேறு யாருமல்ல, மலையாள திரையுலகில் பல படங்களில் நடித்துள்ள நடிகை அஞ்சலி நாயர் என்பவரின் மகள் தான். தற்போது படம் வெளியாகி தனது மகளிண் நடிப்புக்கும் பாராட்டு கிடைத்து வரும் நிலையில் சூர்யா இப்படி தன் மகளை பாராட்ட வீடியோவை பகிர்ந்து கொண்டுள்ளார் அஞ்சலி நாயர்.
மேலும் இது பற்றி கூறும்போது, 'அந்த படப்பிடிப்பு சமயத்தில் என் மகள் காயம் பட்டாலும் பரவாயில்லை என்று தொடர்ந்து காட்சிகளின் நடித்தார். சினிமாவின் மீது அந்த அளவிற்கு அவர் ஆர்வமாக இருக்கிறார். அது மட்டுமல்ல இப்படி அவருக்கு காயம் ஏற்பட்ட விவரம் தெரிய வந்தவுடன் நடிகர் மம்முட்டி உடனடியாக தொடர்புகொண்டு, குறிப்பிட்ட மருத்துவமனையின் பெயரை கூறி அங்கே சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறி ஆலோசனை அளித்தார். அவருக்கு என்னுடைய நன்றி” என்று கூறியுள்ளார் அஞ்சலி நாயர்.