டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், சூர்யா, பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் 'ரெட்ரோ'. படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகம் இருந்தும், ரசிகர்களை முழுமையாகத் திருப்திப்படுத்தவில்லை. நெகட்டிவ்வான விமர்சனங்களும் படத்தின் வசூலை பாதித்தது. இருந்தாலும் 100 கோடி வசூலைக் கடந்ததாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள்.
இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இன்று இரவு சென்னையில் பத்திரிகையாளர்களை 'ரெட்ரோ' படக்குழு சந்திக்க உள்ளது. ஆனால், நிகழ்ச்சி அரங்கிற்குள் கேமராவிற்கு அனுமதி இல்லை என்று சொல்லிவிட்டார்கள். பத்திரிகையாளர்கள் முன்பு நன்றி தெரிவித்து பேசும் நிகழ்வும் நடக்க வாய்ப்பில்லை என்று விசாரித்ததில் தெரிய வந்துள்ளது. ஒரு 'கெட் டு கெதர்' போல நன்றி தெரிவிக்கத் திட்டமிட்டுள்ளார்களாம்.
பத்திரிகையாளர் சந்திப்பில் கேள்வி பதில் என்று நிகழ்த்தினால் தேவையற்ற கேள்விகள் கேட்கப்பட வாய்ப்புண்டு என நினைக்கிறார்களாம். இப்படத்திற்கான நெகட்டிவிட்டியை வேண்டுமென்றே சிலர் பரப்புகிறார்கள் என்றும் படக்குழு வருத்தத்தில் இருப்பதாகத் தெரிகிறது. மற்ற மொழிகளில் கூட சூர்யா, பூஜா ஹெக்டே ஆகியோர் பற்றியும் இப்படத்தின் தொடர்பாக நெகட்டிவ் செய்திகளை வெளியிட சில போட்டி நடிகர்கள், நடிகைகளின் ஆதரவுடன் சிலர் செய்வதாக கோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள்.




