வலைதள இன்ப்ளூயன்சர் வேடத்தில் அனுராக் காஷ்யப் | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் நூறுசாமி | இயக்குனர் சொன்னதை கேட்டு உடல் நடுங்கி விட்டது : ஐஸ்வர்யா ராஜேஷ் | ஹாலிவுட் சண்டை கலைஞர்களுடன் பணியாற்றும் கீர்த்தி சுரேஷ் | அனிமேஷன் கேரக்டருக்கு குரல் கொடுத்தது சுவாரஸ்யம் : ஷ்ரத்தா கபூர் | பிளாஷ்பேக்: மனோரமாவை பார்த்து மிரண்டு ஓடிய தெலுங்கு நடிகைகள் | பிளாஷ்பேக்: 11 வயதில் பின்னணி பாடகியான ஏ.பி.கோமளா | பின்வாங்கிய ராஜ்குமார் ஹிரானி, அமீர் கான் : அப்போ ராஜமவுலிக்கு வெற்றியா? | ராம் சரண் படத்தில் ஷோபனா? | சிரஞ்சீவி படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் தமன்னா |

புஷ்பா 2 படத்தை அடுத்து அட்லி இயக்கும் படத்தில் நடிப்பதற்கு தயாராகிக் வருகிறார் அல்லு அர்ஜுன். சயின்ஸ் பிக்ஷன் கதையில் உருவாகும் இந்த படம் மறுபிறவி கதையில் உருவாகிறது. இப்படத்தில் அல்லு அர்ஜுன் மூன்று வேடங்களில் நடிக்கப் போகிறார். இந்த படம் சம்பந்தப்பட்ட ஆரம்ப கட்ட பணிகளை மும்பையில் தொடங்கி இருக்கிறார் இயக்குனர் அட்லி. அதன் காரணமாகவே தற்போது அல்லு அர்ஜுனும் மும்பையில் முகாமிட்டுகிறார்.
இந்த நேரத்தில் பாலிவுட் நடிகர் அமீர் கானை நேற்று மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார் அல்லு அர்ஜுன். ஏற்கனவே அமீர்கானின் நடிப்பு திறமை குறித்து பல பேட்டிகளில் பாராட்டி பேசி வந்துள்ள அல்லு அர்ஜுன், தனது புதிய படத்தில் ஏதேனும் முக்கிய வேடத்தில் அவரை நடிக்க வைப்பது சம்பந்தமாக கூட சந்தித்திருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தற்போது ஹிந்தியில் சீதாரே ஜமீன் பர் என்ற படத்தை தயாரித்துள்ளார் அமீர்கான். இந்த படம் விருது பெற்ற ஸ்பானிஷ் படமான சாம்பியன்ஸ் என்ற படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும். இப்படம் ஜூன் 20 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.