இட்லி கடை, காந்தாரா சாப்டர் 1 படங்களின் வசூல் நிலவரம் என்ன? | நயன்தாராவின் லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை கைப்பற்றிய ரச்சிதா ராம் | கந்தன் மலை படத்தின், கந்தன் மலையை தொட்டுப்பாரு பாடல் வெளியானது | 'டியூட்' வினியோக நிறுவனம் மாறியது ? | ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' நவம்பர் 7 வெளியீடு | 'பாகுபலி எபிக்' ரிலீஸ் : ஓடிடியில் தூக்கப்பட்ட 'பாகுபலி 1, 2' | ரவி மோகன் நடிக்கும் 'ப்ரோ கோட்' படத் தலைப்பு வழக்கு : நீதிமன்றம் உத்தரவு | ரஜினி, ஸ்ரீதேவி மாதிரி பிரதீப் ரங்கநாதன், மமிதா : டியூட் பட இயக்குனர் பேட்டி | அப்பா இறுதி ஊர்வலத்தில் அம்மா ஆடியது ஏன்? : ரோபோ சங்கர் மகள் பேட்டி | மீண்டும் பெரிய திரையில் ஐரா அகர்வால் |
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் 2023ல் வெளியான ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் நெல்சன். படப்பிடிப்பும் தற்போது சீரான இடைவெளிகளில் நடைபெற்று வருகிறது.
அதே சமயம் இரண்டாம் பாகம் என்பதால் முதல் பாகத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன், மிர்னா உள்ளிட்டோர் இதிலும் நடிக்கிறார்கள். ஆனால் முதல் பாகத்தில் சிறப்பு தோற்றத்தில் சில நிமிடங்கள் வந்து செல்லும் கதாபாத்திரங்களில் நடித்த மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப் ஆகியோர் இந்த படத்திலும் இடம் பெறுவார்களா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்து வருகிறது.
சமீபத்தில் வெளியான எம்புரான் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மோகன்லாலிடம் நீங்கள் ஜெயிலர் 2வில் நடிக்கிறீர்களா என்று கேட்டபோது கூட அவர் இல்லை என்று சொல்லாமல் மழுப்பலாக பதில் சொன்னார். இந்த நிலையில் தற்போது மோகன்லால் மலையாளத்தில் சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் ஹிருதயபூர்வம் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீப நாட்களாக சென்னையில் நடைபெற்று வருகிறது.
இந்த படப்பிடிப்பு தளத்திற்கு நெல்சன் விசிட் அடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜெயிலர் படம் குறித்து மோகன்லாலிடம் பேசுவதற்காக தான் நெல்சன் சென்றுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது. அதனால் இந்த படத்தில் மோகன்லால் நடிப்பது அதிகாரப்பூர்வமாக இதுவரை அறிவிக்கப்படவில்லை என்றாலும் கூட அவர் நடிப்பது உறுதி தான் என்றும் இந்த விசிட் மூலம் உறுதியாகி உள்ளது.