சர்வர் வேலை சாதாரணமானது இல்லை : இயக்குனர் கே.பாக்யராஜ் சொன்ன கதை | நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசளித்த விக்னேஷ் சிவன் | பிளாஷ்பேக்: நட்பின் ஆழம் பேசிய “எங்கள் தங்கம்” படப் பாடல்கள் | இப்போதே புரமோஷனை ஆரம்பித்த 'வாரணாசி' படக்குழு | 'எல்ஐகே' : விக்னேஷ் சிவன் எடுத்த அதிரடி முடிவு | இழந்த வெற்றியை 'மாஸ்க்'கில் மீட்பாரா கவின் ? | தெலுங்கு ரீ என்ட்ரிக்காக காத்திருக்கும் பிந்து மாதவி | தமிழுக்கு வரும் துளு நடிகை | பிளாஷ்பேக் : மம்முட்டி கேரக்டரில் நடித்த சிவகுமார் | பிளாஷ்பேக் : வாய்ப்புக்காக பிச்சைக்காரர் தோற்றத்திற்கு மாறிய ஜெமினி கணேசன் |

'காட்டுப்பய சார் இந்த காளி' படத்தின் மூலம் அறிமுமானவர் ராஜஸ்தான் மாடல் அழகி ஐரா அகர்வால். அதன்பிறகு சினிமா வாய்ப்பு இல்லாமல் தொலைக்காட்சி தொடர் பக்கம் திரும்பினார். கங்கா, கண்மணி, கடைகுட்டி சிங்கம், ராஜாமகள், செம்பருத்தி, மவுனம் பேசியதே உள்ளிட்ட தொடர்களில் நடித்தார்.
தற்போது 'அமரம்' என்ற படத்தின் மூலம் மீண்டும் பெரிய திரைக்கு வந்திக்கிறார். திவ்ய சேத்ரா பிலிம்ஸ் சார்பில் நிர்மலா ராஜன், சி.ஆர்.ராஜன் தயாரிக்கும் படம். ராஜன் தேஜேஸ்வர் கதாநாயகனாக நடித்துள்ளார். ஜார்ஜ், சாய் தீனா, நாகிநீடு, கல்கி ராஜன், ஹரிஷ் பெராடி, வாசுதேவன் முரளி ஆகியோர் நடித்துள்ளனர். தெலுங்கு இசையமைப்பாளர் மிக்கி ஜெ .மேயர் இசையமைத்துள்ளார். பரத்குமார், கோபிநாத் இருவரும் ஒளிப்பதிவு செய்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கியுள்ளார் திருஅருள் கிருஷ்ணன்.
படம் பற்றி இயக்குனர் கூறும்போது “இப்படம் மூன்று காலகட்டங்களில் மூன்று நிலப்பகுதிகளில் நடக்கும் ஒரு அமர காதல் கதை. ஆக்ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகி உள்ள படம். இதுவரை சொல்லப்படாத கிழக்கு காடு மக்களின் வாழ்க்கையை சொல்லும் படமாக இருக்கும்” என்றார்.