வடிவேலு - பஹத்பாசிலின் ‛மாரீசன்' ஆகஸ்ட் 22ல் ஓடிடியில் வெளியாகிறது! | இது ஆரம்பம்தான்: கலக்கலான புகைப்படங்களை வெளியிட்ட ஆர்த்தி ரவி! | எனக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது! ஓப்பனாக பேசிய சம்யுக்தா | என்னது, தீபாவளிக்கு இந்த படங்கள் மட்டுமே ரிலீஸா? | ஆக் ஷனுக்கு மாறும் ஹீரோயின்கள் | இந்த வாரம் இரண்டே படம் ரிலீஸ்… | மகா அவதார் நரசிம்மா: பட்ஜெட் 15 கோடி, வசூல் 250 கோடி | சினிமாவில் இருப்பவர்களே சினிமாவை அழிக்கின்றனர்: இயக்குனர் பேரரசு வேதனை | தமிழில் ஒரு ரவுண்ட் வருவாரா கெட்டிகா ஷர்மா... | தெலுங்கு சினிமா ஸ்டிரைக்: பஞ்சாயத்தில் சிரஞ்சீவி |
மலையாள திரையுலகில் போதைப்பொருள் பயன்பாடு அதிகம் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு வந்த நிலையில் சமீபகாலமாக இரண்டு பிரபலமான நடிகர்கள் போதைப்பொருள் பயன்படுத்தியதாக பரபரப்பு ஏற்படுத்தியது. அதில் நடிகர் ஷைன் டாம் சாக்கோ போலீசாரால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டு போதை மீட்பு மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் மலையாள திரையுலகை சேர்ந்த காலித் ரஹ்மான் மற்றும் அஷ்ரப் ஹம்சா என்ற இரண்டு இயக்குனர்கள் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கூறி கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டனர்.
இதில் காலித் ரஹ்மான் என்பவர் மம்முட்டியை வைத்து உண்ட, டொவினோ தாமஸை வைத்து தள்ளுமால மற்றும் சமீபத்தில் பிரேமலு புகழ் நஸ்லேன் நடித்த ஆலப்புழா ஜிம்கானா உள்ளிட்ட படங்களை இயக்கி பிரபலமானவர். இவர்கள் கைது ஒரு பக்கம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இவர்கள் பிடிபட்ட அப்பார்ட்மெண்டில் உள்ள பிளாட் இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான சமீர் தாஹிருக்கு சொந்தமானது என்பதால் இதில் அவருக்கும் தொடர்பு உண்டு என்று தற்போது அவரும் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இவர் துல்கர் சல்மான் நடித்த நீலாகாசம் பச்சக்கடல் ஸ்வர்ண பூமி மற்றும் கலி உள்ளிட்ட படங்களை இயக்கியவர். தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி 2 படத்திற்கு இவர்தான் ஒளிப்பதிவு செய்தவர். இந்த நிலையில் ஜாமினில் வெளியான அவர், இப்படி தன்னுடைய வீட்டில் போதை பொருள் இருந்தது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளார், அதே சமயம் இவர் தற்போது வாடகைக்கு வசித்து வரும் சம்பந்தப்பட்ட அப்பார்ட்மெண்டில் உள்ள குடியிருப்போர் சங்கம் இவரை விரைவில் அவருடைய பிளாட்டில் இருந்து காலி செய்து கிளம்புமாறு தீர்மானம் நிறைவேற்றியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.