பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சூர்யா, பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் 'ரெட்ரோ'. 90களில் நடக்கும் கதை இடம் பெற்ற இப்படத்தில் கால்நடை மருத்துவர் 'ருக்கு' என்ற கதாபாத்திரத்தில் பூஜா ஹெக்டே நடித்திருந்தார். அந்தக் கால குடும்பப் பாங்கான தமிழ்ப் பெண்ணாக அவர் நடித்த கதாபாத்திரமும், அவரது எளிமையான தோற்றமும் பல ரசிகர்களைக் கவர்ந்தது.
இருந்தாலும் சில தெலுங்கு ஊடகங்கள் மட்டும் பூஜாவை கடுமையாக விமர்சித்தது. அவரது தொடர் தோல்விப் படங்களில் இதுவும் என்று எழுதியது. இதற்குப் பின்னால் வேறு சில நடிகைகளின் மேனேஜர்கள் இருந்ததாக பூஜாவின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் குற்றம் சாட்டினர்.
இதனிடையே, இப்படத்தில் தன்னுடைய ருக்கு கதாபாத்திரத்திற்குக் கிடைத்த வரவேற்பு குறித்து பூஜா நன்றி தெரிவித்து, “நன்றியுணர்வு பதிவு - ருக்குவாக நான் நடித்ததற்கு எனக்கு அன்பையும், பாராட்டையும் தெரிவித்த அனைவருக்கும் ஒரு சிறப்பு நன்றி. இது மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. தனிப்பட்ட செய்திகளுக்கும் நன்றி. அவர்களின் அழகான பதிவுகளுக்கு என் ரசிகர்களுக்கு நன்றி. மற்றும் அனைத்து 'கனிமா' ரீல்களுக்கும் நன்றி. அன்பு மற்றும் அன்பு மட்டுமே இதற்கான பதில்,” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.