தங்கலான் படத்திற்காக அதிகம் மெனக்கெட்டேன்: மனம் திறந்த மாளவிகா மோகனன் | திருமணம், குழந்தை பெற்றுக் கொள்வதுதான் முழுமையான வாழ்க்கையா : சமந்தா கேள்வி | ஸ்வீட் ஹார்ட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | மணிரத்னத்துடன் எடுத்த போட்டோ : ராஜ்குமார் பெரியசாமி நெகிழ்ச்சி | வெளியானது 'விடாமுயற்சி' படம்: ரசிகர்களுடன் படம் பார்த்த திரை பிரபலங்கள் | பிளாஷ்பேக் : படப்பிடிப்பிற்கே வந்து நடிகையை கடத்த முயன்றவர்களை அடித்து துரத்திய கொச்சின் ஹனீபா | தான் நடத்திய வழக்கை படமாக இயக்கும் வழக்கறிஞர் | கேரளாவில் இருந்து நடந்தே வந்து விஜய்யை சந்தித்த ரசிகர் | ராஷ்மிகாவுக்கு உதவி செய்யாத விஜய் தேவரகொண்டா ; நெட்டிசன்கள் கண்டனம் | திலீப் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் மோகன்லால் |
தமிழ்,தெலுங்கு,ஹந்தி உள்ளிட்ட பல மொழிகளில் 600க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் காகா ராதாகிருஷ்ணன். சிவாஜியையே நாடகத்திற்கும் சினிமாவிற்கும் அழைத்து வந்தவர் இவர் தான். தன்னுடைய 6 வயதில் நவாப் ராஜமாணிக்கம் நாடக குழுவில் சேர்ந்த ராதா கிருஷ்ணன், பிறகு என்.எஸ்.கிருஷ்ணன் நாடக குழுவில் சேர்ந்தார். பிறகு மங்கையர்கரசி படம் மூலம் சினிமாவில் அறிமுகமான அவர் தொடர்ந்து நல்லதம்பி, வண்ணசுந்தரி, மனோகரா, , தேவர் மகன், இருவர், காதலுக்கு மறியாதை, உதவிக்கு வரலாமா, உனக்காக எல்லாம் உனக்காக, உன்னைத்தேடி, ஹலோ, ரோஜாவனம், விண்ணுக்கும் மண்ணுக்கும், மனதை திருடிவிட்டாய், மானஸ்தன், வசூல் ராஜா எம்.பி.பி.எஸ், இதய திருடன், உள்ளிட்ட 600க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.
இந்நிலையில் நேற்று இரவு மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதனையடுத்து அவரது உடல் பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது. நேற்று இரவு இறந்த இவருக்கு இன்று மதியம் 1மணி வரை, வெறும் 4 நான்கு திரையுலகினர் மட்டுமே வந்து மரியாதை செலுத்தியுள்ளனர். தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பாக ஒருவரும், தென்னிந்திய நடிகர்சங்கம் சார்பாக ஒருவரும் அஞ்சலி செலுத்தியுள்ளனர். ஒரு பத்திரிக்கையாளர், ஒரு பிஆர்ஒ, இரண்டு புகைப்பட கலைஞர்கள், ஒரு சில மீடியா என்று மிகவும் குறைந்த அளவிலேயே திரையுலகினர் கலந்து கொண்டனர். இன்றைய இளைய நடிகர்களாவது மரியாதை செலுத்தி இருந்தால் அவருக்கு மரியாதையாக இருந்திருக்கும். ஆனால் என்னவோ 1மணி வரை யாரையும் காணோம். பலருக்கு கிடைத்த கலைமாமணி விருது கூட இவருக்கு கிடைக்கவிலை என்ற ஏக்கமும் இவருக்கு இருந்திருக்கிறதாம். எதிர்காலத்திலாவது இது போன்ற மூத்த நடிகர்களுக்கு மறியாதை செய்ய நாம் கடமைப்படுவோமாக.