மாதவனின் வருத்தம் | அந்தரங்க வீடியோ என வைரல் : ஸ்ருதி நாராயணன் காட்டமான பதில் | தமிழில் அடுத்தடுத்து அறிமுகமாகும் மலையாள நடிகர்கள் | தென்னிந்திய ரசிகர்களை குறை சொல்லும் சல்மான் கான் | ராஷ்மிகாவின் வாழ்நாள் பயம் இதுதான் | ரசிகரின் தந்திர கேள்வியும்... சமந்தாவின் சாதுர்ய பதிலும்...! | துல்கர் சல்மானை துப்பாக்கி முனையில் விரட்டிய வீட்டு உரிமையாளர் | மகளை பாடகி ஆக்கிய பிரித்விராஜ் | எம்புரான் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி, சல்மான் கான்? : இயக்குனர் பிரித்விராஜ் பதில் | எல் 2 எம்புரான் - முதல் நாள் வசூல் எவ்வளவு? |
கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. சில தினங்களாக போட்டியாளர்களின் குடும்ப நபர்கள் வந்து செல்கின்றனர். ஷிவானியை பார்க்க அவரது தாய் வந்ததோடு, பெற்ற மகளை நிகழ்ச்சி என்ற கூட பார்க்காமல் விளாசி தள்ளிவிட்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் நடந்து கொண்ட விதம், பாலாஜியின் பின்னால் சுற்றியது போன்ற காரணங்களை சுட்டிக்காட்டி அவரை திட்டினார். இந்த நிகழ்வு சமூகவலைதளங்களில் விமர்சனத்திற்கு உள்ளானது.
இதுப்பற்றி பாடகி சின்மயி சமூகவலைதளத்தில், ''இந்த நிகழ்ச்சியை நான் பார்ப்பது கிடையாது. ஆனால் ஒருவர் எனக்கு இதுப்பற்றி என்னிடம் கூறினார். தாயே தன் மகளை அசிங்கப்படுத்தியது தவறாக தெரிகிறது. சின்ன விஷயத்திற்கு கூட மகள்களை விலைமாது போன்று நடத்தும் பழக்கம் இந்திய பெற்றோர் சிலரிடம் உள்ளது. யாரை மயக்க பாக்குற, எவன் பின்னாடி சுத்துற என அம்மாக்களே கேட்கிறார்கள். ஊர்ல 4 (உதவாக்கர) பேர் என்ன சொல்வாங்க என்பது தான் பெற்றோர்கள் தங்கள் மகள்களையே அசிங்கப்படுத்த காரணம். இதுபோன்று செய்யாதீர்கள், பொறுப்பாக பேசுங்கள் என பதிவிட்டுள்ளார்.