சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' டீசர் வெளியீடு | சிம்புவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு | சென்னையில் நாளை ஜனநாயகன் மறு தணிக்கை நடக்கிறது | பவன் கல்யாணை பாராட்டும் ஸ்ரீலீலா | 'மாத்ருபூமி' ஆக மாறிய 'பேட்டில் ஆப் கல்வான்' | முன்பதிவில் 120 கோடி வசூல் கடந்த 'துரந்தர் 2' | கைவசம் பல படங்கள் : வெற்றிக்காக ஏங்கும் ஜெய் | அரசியலுக்கு வருவாரா திரிஷா? | அஜித் இயக்குனர்கள் ரெடி : ஆனா தயாரிப்பாளர் எங்கே | ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல் |

ஹிந்தித் திரையுலகத்தில் தொடர் தோல்விகளால் கீழே இறங்கி வந்த அக்ஷய் குமாரை கடந்த வாரம் வெளியான 'ஸ்கை போர்ஸ்' படம் மேலே தூக்கிவிட்டுள்ளது. இப்படம் ஒரு வாரத்தில் 100 கோடி நிகர வசூலைக் கடந்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
படத்தின் பட்ஜெட் 150 கோடிக்கும் அதிகமாக இருந்தாலும் இன்னும் சில கோடிகள் வசூலித்து நஷ்டத்தைத் தவிர்க்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கிறார்கள். ஓடிடி, சாட்டிலைட் உரிமைகள் மூலமும் குறிப்பிடத்தக்க வருமானம் வரவும் வாய்ப்புள்ளது.
தெலுங்கு மொழிப் படங்களின் தாக்கத்தால் பாலிவுட்டில் டிரெண்ட் மாறிவிட்டதால் அங்கு சில சீனியர் நடிகர்களின் படங்கள் பெரிய வரவேற்பைப் பெறுவதில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு அக்ஷய்குமாருக்கு 100 கோடி கிளப் வசூலுடன் ஆரம்பமாகியுள்ளது. இது அப்படியே தொடர வேண்டும் என அவரது ரசிகர்களும் விரும்புகிறார்கள்.