பழம்பெரும் நடிகை புஷ்பலதா காலமானார் | தயாரிப்பாளர் ஆன காரணம் குறித்து பகிர்ந்த சிம்பு | எனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு - துல்கர் சல்மான் | பிப்ரவரி 7ம் தேதி ஓடிடியில் 'கேம் சேஞ்ஜர்' | ‛குட் பேட் அக்லி' படத்துக்காக ரீமிக்ஸ் செய்யப்படும் அஜித்தின் சூப்பர் ஹிட் பாடல் | 2 ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த வைபவின் ஆலம்பனா மார்ச் 7ல் ரிலீஸ் | மினுக்கி மினுக்கி பாடலுக்கு அரை மணி நேரத்தில் டியூன் போட்டேன் : ஜி.வி. பிரகாஷ் | பராசக்தி படத்தில் இணையும் மலையாள பட நடிகர் | சிவகார்த்திகேயனை விட்டு விலகி நானி உடன் இணையும் சிபி சக்கரவர்த்தி | கீர்த்தி சுரேஷ் - ராதிகா ஆப்தே நடிக்கும் 'அக்கா' |
நடிகர் ஏ.வி.எம்.ராஜனின் மனைவியும், பழம்பெரும் நடிகையுமான புஷ்பலதா (87) காலமானார்.
கடந்த 1961ம் ஆண்டு, ‛கொங்கு நாட்டு தங்கம்' திரைப்படம் மூலம், நடிகையாக அறிமுகமானவர் புஷ்பலதா. தொடர்ந்து, அன்றைய காலகட்டத்தில் முன்னணி நடிகர்களாக இருந்த எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி, எஸ்.எஸ்.ராஜேந்திரன் உள்ளிட்ட பலருடனும் இணைந்து நடித்திருந்தார்.
ஏ.வி.எம்.ராஜனுடன் இணைந்து, ‛நானும் ஒரு பெண்' என்ற படத்தில் நடித்த போது, அவருடன் காதல் கொண்டு, திருமணம் செய்து கொண்டார். சகலகலா வல்லவன், நான் அடிமை இல்லை ஆகிய படங்களில் துணை கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்.
இந்நிலையில், சென்னையில் வசித்து வந்த அவர், வயது மூப்பின் காரணமாக, தனது 87வது வயதில், நேற்று (பிப்.,4) காலமானார். அவரது மறைவுக்கு திரைத்துறையை சேர்ந்தவர்கள், இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.