பிளாஷ்பேக் : புஷ்பலதா, ஏவி.எம்.ராஜன் கிறிஸ்தவ போதகர்கள் ஆனது எப்படி? | பிளாஷ்பேக்: மேடை நாடகத்தில் வெற்றி பெற்று வெள்ளித்திரையில் தோற்றுப் போன “டம்பாச்சாரி” | 'விடாமுயற்சி' பட்ஜெட் எவ்வளவு ? | நீக் படத்திலிருந்து ‛புள்ள' பாடல் வெளியானது | மஞ்சள் தாலியை மாற்றிய கீர்த்தி சுரேஷ் | மூன்றாவது மகன் பவனுக்கு காது குத்து விழா நடத்திய சிவகார்த்திகேயன் | மீண்டும் அஜித், அர்ஜுன், திரிஷா கூட்டணி 'விஸ்வரூப வெற்றி' பெறுமா? | பழம்பெரும் நடிகை புஷ்பலதா காலமானார் | தயாரிப்பாளர் ஆன காரணம் குறித்து பகிர்ந்த சிம்பு | எனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு - துல்கர் சல்மான் |
பழம்பெரும் தமிழ் நடிகை புஷ்பலதா. இவரது பூர்வீகம் ஆந்திரபிரதேசம். ஆனாலும் தமிழ்நாட்டில் உள்ள திருப்பூரில் இவரது குடும்பம் வசித்து வந்தது. பின்னர் சென்னைக்கு மாறியது. இயற்கையிலேயே அழகான புஷ்பலதாவிற்கு சினிமாவில் நடிக்கும் ஆசை இருந்தது. இந்த தேடலின் காரணமாக முதலில் 'செரபுக்கு சேவடு' என்ற தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழில் 'செங்கோட்டை சிங்கம்' படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து யாருக்கு சொந்தம், நானும் ஒரு பெண், சிம்லா ஸ்பெஷல், கற்பூரம் , பார் மகளே பார், அம்மாவும் நீயே அப்பாவும் நீயே, புது வெள்ளம், சாரதா, ஜீவனாம்சம், தரிசனம், தாயே உனக்காக போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாகவும் குணச்சித்திரப் பாத்திரங்களிலும் நடித்துள்ளார். இத்துடன் பல தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
'நானும் ஒரு பெண்' படத்தில் ஏவி.எம்.ராஜனுடன் இணைந்து நடித்தபோது இருவரும் காதலித்துத் திருமணமும் செய்து கொண்டார்கள். பிறப்பால் கிறிஸ்தவரான புஷ்பலதா கிறிஸ்தவ பெண்ணாகவே வாழ்ந்தார். ஏவிஎம்.ராஜன் இந்துவாக வாழ்ந்தார்.
இந்த நிலையில் இரண்டு படங்களை சொந்தமாக தயாரித்தார்கள். இதனால் பெரும் பொருளாதார சிக்கலை ஏற்படுத்திக் கொண்டார்கள். இரண்டு படங்களுமே தோல்வி அடைந்தது. மகள் மகாலட்சுமியை நடிகையாக்க விரும்பினார். அந்த கனவும் நடக்கவில்லை. இப்படி வாழ்க்கையில் தோல்வி, பொருளாதார சிக்கல் என பிரச்னைகளை சந்தித்தனர். இந்தச்சூழலில் தனது கணவரையும், மகளையும் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றினார் புஷ்பலதா.
பின்னர் கணவன், மனைவி இருவரும் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டு கிறிஸ்தவ மதபோதகர் ஆனார்கள். இருவருமே புகழ்பெற்ற திரைப்பட கலைஞர்கள் என்பதால் இவர்கள் பிரசங்கங்களுக்கு கிறிஸ்தவர்கள் திரண்டனர். உலக நாடுகள் முழுவதும் சுற்றினார்கள். பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைந்தார்கள். நடிகை புஷ்பலதா வயதுமூப்பால் வரும் உடல்நலப் பிரச்னையால் நேற்று இரவு சென்னையில் காலமானார்.