என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
தெலுங்கு
திரையுலகில் பிரபல காதல் ஜோடியாக பேசப்பட்டு வருவது விஜய் தேவரகொண்டா -
ராஷ்மிகா ஜோடி தான். ஆனால் இதுவரை இவர்கள் இந்த காதல் கிசுக்கிசுக்களை
மறுத்ததும் இல்லை. அதே சமயம் ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டா இருவரும் சில
சமயங்களில் சூசகமாக தங்கள் காதலை வெளிப்படுத்தவும் தவறியது இல்லை. புஷ்பா 2
விழா சென்னையில் நடந்த போது ராஷ்மிகாவே அதை பட்டும் படாமல்
வெளிப்படுத்தினார்.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு
ஜிம்மில் உடற்பயிற்சி செய்த ராஷ்மிகாவுக்கு காலில் அடிபட்டது. இரண்டு
மூன்று இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் ஊன்றுகோல் உதவியுடன் தான்
நடந்து வருகிறார் ராஷ்மிகா. இந்த சிரமத்தினுடனேயே இவர் பாலிவுட்டில்
தற்போது நடித்துள்ள 'ச்சாவா' திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கூட
கால்களில் நொண்டி அடித்தபடியே நடந்து வந்து கலந்து கொண்டது ரசிகர்களை நெகிழ
வைத்தது.
தற்போது விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகாவும் ஒரு காரில்
ஏறுவது போன்ற வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. அதில்
விஜய் தேவரகொண்டா விறுவிறு என காரில் ஏறுகிறார்.. அவர் கூடவே நொண்டியபடி
வரும் ராஷ்மிகாவுக்கு காரில் ஏறுவதற்கு அவர் எந்த உதவியும் செய்யவில்லை.
இந்த
வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் விஜய் தேவரகொண்டாவை ராஷ்மிகாவுக்கு உதவி
செய்யாததற்காக திட்டி தீர்த்து வருகின்றனர். உங்களுக்குள் காதல் இருக்கிறதோ
இல்லையோ, அது வெளியே தெரிந்து விடும் என்றெல்லாம் கவலைப்படாமல் ஒரு
பெண்ணாக கூட ராஷ்மிகாவுக்கு உதவி செய்ய உங்களுக்கு என்ன கஷ்டம்
வந்துவிட்டது என்று தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.