தமிழகத்தில் அதிக வசூல் செய்த டாப் 5 படங்கள்...!! | இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் |
தங்களது அபிமான ஹீரோக்களை எப்படியவடஹு சந்தித்து விட வேண்டும் என ஒவ்வொரு ரசிகரும் ஒவ்வொரு விதமாக முயற்சி செய்கின்றனர். அப்படி கேரளாவை சேர்ந்த விஜய் ரசிகரான உன்னி கண்ணன் என்பவர் சென்னை வந்து பலமுறை விஜய்யை சந்திக்க முயற்சி செய்தும் முடியாமல் போனது. அதற்காக தனது முயற்சியை நிறுத்தாமல் வித்தியாசமான முறையில் யோசித்து விஜய் சந்திக்க முடிவு செய்தார். அதன் தொடர்ச்சியாக கடந்த ஜனவரி 1ம் தேதி அன்று சென்னை வந்து விஜய் சந்திப்பதற்காக கேரளாவில் மங்கலம் பகுதியில் இருந்து நடை பயணம் மேற்கொண்டார் உன்னி கண்ணன்.
கழுத்தில் விஜய் படத்தை கட்டி தொங்க விட்டபடி கைகளிலும் விஜயின் பெரிய புகைப்படங்களை பிடித்தபடி அவர் நடைப்பயணம் மேற்கொண்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரல் ஆகின. எப்படியும் இது விஜய்யின் கவனத்திற்கு சென்று விடும், அவரை இந்த முறை சந்தித்து விடலாம் என்பது தான் உன்னி கண்ணனின் நம்பிக்கையாக இருந்தது. அதற்கேற்றபடி சென்னை வந்து விஜய்யையும் சந்தித்து விட்டார் உன்னி கண்ணன். ஆனால் சந்தோஷத்திலும் ஒரு சோகம் என்பது போல விஜய்யை சந்தித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இவரால் பகிர்ந்து கொள்ள முடியவில்லை.
காரணம் இவரது இந்த நடைப்பயணம் பற்றி கேள்விப்பட்ட விஜய் இவரை சந்திப்பதற்காக தற்போது தான் நடித்து வரும் ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்திற்கு அவரை அழைத்து வரும்படி கூறி இருக்கிறார். படப்பிடிப்பு தளத்தில் வைத்து அவரை சந்தித்து தனது கேரவனிலும் உன்னி கண்ணனை அமர வைத்து பத்து நிமிடங்களுக்கு மேல் பேசியும் இருக்கிறார். ஆனால் அங்கே செல்போன் கொண்டு போக உன்னி கண்ணன் அனுமதிக்கப்படவில்லை. அதே சமயம் உன்னி கண்ணனின் விருப்பப்படி விஜய்யுடன் இணைந்து அவர் புகைப்படம் எடுத்துக் கொண்டார். ஆனால் விஜய் படப்பிடிப்பு உடையில் இருந்ததால் தற்போது தனக்கு அந்த புகைப்படம் கொடுக்கப்படவில்லை என்றும், விரைவில் அனுப்பி வைப்பதாக கூறியுள்ளார்கள் என்றும் உன்னி கண்ணன் தனது சோசியல் மீடியா பதிவில் விஜய்யை சந்தித்தது குறித்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.