இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
வழக்கறிஞரான சிவராமன் தான் ஏற்று நடத்திய ஒரு வழக்கை மையமாக வைத்து 'வில்'என்ற படத்தை இயக்கி, தயாரித்துள்ளார். வில் என்றால் உயில் என்று பொருள். இந்த படத்தில் சோனியா அகர்வால், விக்ராந்த் நடித்துள்ளனர். முழுமையான கோர்ட் டிராமாவாக படம் உருவாகி உள்ளது.
சோனியா அகர்வால் முதன்மைப் பாத்திரத்தில், நீதிபதியாக மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விக்ராந்த் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சோனியா அகர்வால், சகோதரர் சவுரப் அகர்வால் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
ஒரு குடும்பத்தில் ஒரு உயில் ஏற்படுத்தும் பிரச்னை, நீதிமன்றத்திற்கு வழக்காக வருகிறது. அந்த வழக்கு என்ன ஆனது? உயிலின் பின்னால் இருக்கும் மர்மம் என்ன? என்பது தான் படம். சென்னை மற்றும் கோத்தகிரியில் படமாக்கப்பட்டுள்ளது.