'எல் 2 எம்புரான்' படத்தின் பட்ஜெட் இவ்வளவுதானா ? | அஜித், தனுஷ் கூட்டணியை உறுதி செய்த தயாரிப்பாளர்! | சல்மான்கான் சொன்ன கதைக்கு மறுப்பு தெரிவித்து ஏ.ஆர். முருகதாஸ்! | தனுஷ், விக்னேஷ் ராஜா படத்தின் புதிய அப்டேட்! | பாவனாவின் வருஷம் 14! | முதல் பாகத்தில் இறந்தேன்.. 2ம் பாகத்தில் நடித்துள்ளேன் ; எம்புரான் நடிகர் வைக்கும் டுவிஸ்ட் | 15 கோடி கேட்கும் ரவுடி பேபி | ‛கட் அண்டு ரைட்'டாக பேசும் நடிகை | 'இன்ஸ்டன்ட் ஹிட்' ஆன 'ரெட்ரோ' கனிமா….. | 'மதராஸி' படப்பிடிப்பு எப்போது முடியும்? |
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி தமிழில் ரங்கூன், அமரன் உள்ளிட்ட இரண்டு படங்களை இயக்கியுள்ளார். இவற்றில் அமரன் படம் கடந்தாண்டு வெளியாகி சூப்பர், டூப்பர் ஹிட்டானது. இந்நிலையில் இப்படம் வெளியாகி 100 நாட்களை கடந்த நிலையில் ராஜ்குமார் பெரியசாமி அவரது சமூக வலைதள பக்கத்தில் மணிரத்னத்துடன் எடுத்த போட்டோவை பதிவிட்டுள்ளார்.
அதன்படி, "நான் புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்பிய முதல் திரைத்துறை சார்ந்த நபர் நீங்கள் தான். அது 2005ல் நடக்கவும் செய்தது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக அதனை நான் தொலைத்துவிட்டேன். அதனை நினைத்து மன வேதனை அடைந்தேன். இரண்டு தசாப்தங்கள் கழித்து, இரண்டு படங்களை இயக்கிய பின்னர் இப்போது உங்களுடன் அருகில் நின்று புகைப்படத்தை எடுப்பதற்கு தைரியம் வந்துள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.