'எல் 2 எம்புரான்' படத்தின் பட்ஜெட் இவ்வளவுதானா ? | அஜித், தனுஷ் கூட்டணியை உறுதி செய்த தயாரிப்பாளர்! | சல்மான்கான் சொன்ன கதைக்கு மறுப்பு தெரிவித்து ஏ.ஆர். முருகதாஸ்! | தனுஷ், விக்னேஷ் ராஜா படத்தின் புதிய அப்டேட்! | பாவனாவின் வருஷம் 14! | முதல் பாகத்தில் இறந்தேன்.. 2ம் பாகத்தில் நடித்துள்ளேன் ; எம்புரான் நடிகர் வைக்கும் டுவிஸ்ட் | 15 கோடி கேட்கும் ரவுடி பேபி | ‛கட் அண்டு ரைட்'டாக பேசும் நடிகை | 'இன்ஸ்டன்ட் ஹிட்' ஆன 'ரெட்ரோ' கனிமா….. | 'மதராஸி' படப்பிடிப்பு எப்போது முடியும்? |
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர் நடிகர் ரியோ ராஜ். பிளான் பண்ணி பண்ணணும், நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, ஜோ ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் 'ஸ்வீட் ஹார்ட்' எனும் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இதனை அறிமுக இயக்குனர் ஸ்வினீத் எஸ். சுகுமார் என்பவர் இயக்கியுள்ளார்.
இதில் கதாநாயகியாக சுழல் வெப் தொடரில் நடித்த கோபிகா ரமேஷ் நடிக்கின்றார். ஏற்கனவே இதன் படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெற்று போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் இப்போது படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர். அதன்படி இத்திரைப்படம் வருகின்ற மார்ச் 14ம் தேதி அன்று திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இளைஞர்களை கவரும் விதமாக காதல் கதையில் இந்தப்படம் உருவாகி உள்ளது.