ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் ஸ்வினீத் சுகுமார் எழுதி இயக்கிய திரைப்படம் 'ஸ்வீட்ஹார்ட்'. இந்த படத்தில் ரியோ ராஜ், கோபிகா ரமேஷ் மற்றும் பலர் நடித்திருந்தனர். கடந்த மார்ச் 14ம் தேதி தமிழகம் முழுவதும் இந்த திரைப்படம் வெளியாகியது.
ஸ்வீட்ஹார்ட் திரைப்படத்தை தமிழகம் முழுவதும் பைவ் ஸ்டார் செந்தில் என்பவர் வெளியிட்டு இருந்தார். இந்த படத்துக்காக தமிழக வெளியீட்டு உரிமையை சுமார் 5 கோடிக்கு வாங்கியிருந்தார். இதுவரை இந்த திரைப்படம் தமிழகத்தில் மொத்தமே ஒரு கோடி ரூபாய் கூட வசூல் செய்யவில்லை என்பதே பல விநியோகஸ்தர்களின் கருத்தாக உள்ளது.
இதனால் இந்த திரைப்படம் சுமார் 4 கோடி ரூபாய் வரை வாங்கிய விநியோகஸ்தருக்கு நஷ்டம் ஏற்படும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த வசூலால் தயாரிப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா மிகுந்த மன வருத்தத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விநியோகஸ்தரின் நஷ்டத்தை போக்க ஏதாவது ஏற்பாடு செய்து தருவார் என்று எதிர்பார்க்கபடுகிறது.