சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட சமந்தா, நான்கு ஆண்டுகளில் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக விவாகரத்து செய்து கொண்டார். தெலுங்கு நடிகை சோபிதாவை கடந்த ஆண்டில் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் நாகசைதன்யா. அதையடுத்து சமந்தா எப்போது இன்னொரு திருமணம் செய்து கொள்ளப் போகிறார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் இயக்குனர் ஒருவரை அவர் காதலித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் அவர் அளித்த ஒரு பேட்டியில், நாகசைதன்யாவின் இரண்டாவது திருமணம் குறித்து அவரிடத்தில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, என்னுடைய வாழ்க்கையில் பல விஷயங்களை கடந்து வந்திருக்கிறேன். அதேபோன்று தான் திருமண பந்தத்தில் இருந்தும் கடந்து வந்துள்ளேன். அதோடு சில விஷயங்களில் இருந்து விலகி இருக்க விரும்புகிறேன், இதனால் நான் மிகவும் தெளிவாக இருக்கிறேன். மற்றபடி நாகசைதன்யா இரண்டாவது திருமணம் செய்து கொண்டது குறித்து அவர் மீது எந்தவித பொறாமையோ, வெறுப்போ எனக்கு ஏற்படவில்லை.
அதோடு இந்த சமூகத்தில் பெண்கள் திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஒரு கட்டமைப்பை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள்தான் வாழ்க்கையில் முழுமை பெற்று விட்டதாகவும் கருதுகிறார்கள். ஆனால் நான் அதை அப்படி பார்க்கவில்லை. தனிமையிலும் மகிழ்ச்சி உள்ளது. பெண்கள் திருமணம் செய்து கொள்ளாமலும் தன்னம்பிக்கையோடும் உறுதியோடும் வாழ முடியும் என்பதே எனது கருத்தாக உள்ளது என்று தெரிவித்திருக்கிறார்.