நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் | பழம்பெரும் தெலுங்கு சினிமா பாடலாசிரியர் சிவசக்தி தத்தா மறைவு: இவர் இசையமைப்பாளர் கீரவாணியின் தந்தை | அடுத்த ஆண்டு ‛ராட்சசன் 2' : விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தை வாழ்த்திய ராஷ்மிகா | ஹரிஹர வீரமல்லு படத்தின் தமிழக உரிமை விற்பனை | ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா | ‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் | ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? |
தமிழில் விக்ரம் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கிய 'தங்கலான்' படத்தில் நடித்திருந்த மாளவிகா மோகனன், அதை அடுத்து கார்த்தி நடிக்கும் 'சர்தார்-2' படத்தில் நடித்தவர், தற்போது தெலுங்கில் பிரபாஸ் நடிக்கும் 'ராஜா சாப்' என்ற படத்திலும், மலையாளத்தில் மோகன்லாலுடன் 'ஹிருதயபூர்வம்' படத்திலும் நடித்து வருகிறார்.
இதற்கிடையே 'தங்கலான்' திரைப்படம் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளதாக அறிவித்தனர். இது தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்ற மாளவிகா மோகனன், ''பார்வையாளர்கள் எப்போதும் என்னைப் பார்க்கும் விதத்தில் இருந்து மாற்றி பார்க்க விரும்பினேன். வழக்கமான எனது நாயகி பிம்பத்தை உடைக்க காத்திருந்த சமயத்தில் 'தங்கலான்' வாய்ப்பு கிடைத்தது. அந்தக் கதாபாத்திரத்துக்காக நான் உயிரை கொடுத்தேனா இல்லையா என்பதைவிட அதற்காக அதிக மெனக்கெட்டேன்.
அதில் வரும் முடிக்கூட என்னுடையது இல்லை. மேக்கப் வித்தியாசமாக இருந்தது. இந்தக் காரணங்களால் எனக்கு தங்கலான் படத்தில் நடிக்க சுவாரசியமாகவும் அச்சுறுத்தலாகவும் இருந்தது. ஆனால், அதில்தான் நான் எதிர்பார்த்ததை செய்யும் வாய்ப்பு இருப்பதை கவனித்தேன். அதனால் வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டேன்'' எனப் பேசினார்.