மீண்டும் வருகிறோம்- மங்காத்தா படப்பிடிப்பு புகைப்படங்களை வெளியிட்ட வெங்கட் பிரபு! | ஜனவரி 23ல் ஓடிடியில் வெளியாகும் தனுஷின் தேரே இஸ்க் மெய்ன்! | விஜய் ஆண்டனி, ஜிவி பிரகாஷ்குமார் வரிசையில் கங்கை அமரன், தேவிஸ்ரீ பிரசாத் | 25 ஆண்டுகளுக்கு பின் மறுமணமா : பார்த்திபனின் 'நச்' பதில் | ஜனநாயகன் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு; நீதிமன்ற முழு வாதங்கள் இதோ... | மீண்டும் அப்பாவாகிறார் அட்லி | பிளாஷ்பேக் : ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ரகுவரன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் இரண்டு கதைகள் | ஜப்பானில் 'புஷ்பா 2' படத்திற்கு குறைவான வரவேற்பு | உண்மை சம்பவங்கள் பின்னணியில் 'மை லார்ட்' |

ஜிம்மில் ஒர்க் அவுட் செய்தபோது காலில் அடிபட்டு சிகிச்சைக்கு பின் ஓய்வில் இருந்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா. என்றாலும் தனது படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சக்கர நாற்காலியில் சென்று வருகிறார். இதற்காகவே தற்போது அவர் ஐதராபாத்தில் உள்ள தனது வீட்டில் தங்கி இருக்கிறார்.
இந்நிலையில் தனது வீட்டில் டி-ஷர்ட் அணிந்து தான் அமர்ந்திருக்கும் ஒரு புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார் ராஷ்மிகா. அந்த டி-ஷர்டில் கனிவுடன் என்ற வார்த்தை அச்சிடப்பட்டுள்ளது.
அதுபற்றி அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‛‛இன்றைய நாட்களில் கருணை என்பது மிகவும் குறைவாக மதிப்பிடப்படுகிறது. நான் கருணை மற்றும் அதனுடன் வரும் அனைத்தையும் சேர்த்து தேர்வு செய்கிறேன். நாம் அனைவருமே ஒருவருக்கொருவர் அன்பாக இருப்போம்'' என்று பதிவிட்டுள்ளார்.
விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகாவும் ஒரு காரில் ஏறுவது போன்ற வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வெளியானது. அதில் விஜய் தேவரகொண்டா விறுவிறு என காரில் ஏறுகிறார்.. அவர் கூடவே நொண்டியபடி வரும் ராஷ்மிகாவுக்கு காரில் ஏறுவதற்கு அவர் எந்த உதவியும் செய்யவில்லை. இதையடுத்து பலரும் விஜய் தேவரகொண்டாவை வலைதளங்களில் விமர்சித்தனர். இதற்கு பதிலளிக்கும் விதமாக ராஷ்மிகாவின் இந்த பதிவு இருக்கும் என தெரிகிறது.
மராட்டிய மன்னர் சாம்பாஜியின் வாழ்க்கையை தழுவி ‛சாவா' என்ற ஹிந்தி படம் உருவாகி உள்ளது. இதில் மகாராணி ஏசுபாய் வேடத்தில் ராஷ்மிகா நடித்துள்ளார். இப்படம் பிப்., 14ல் காதலர் தினத்தில் திரைக்கு வருகிறது. இது தவிர, சிக்கந்தர், குபேரா, தி கேர்ள் பிரண்ட் போன்ற படங்களிலும் ராஷ்மிகா நடித்து வருகிறார்.




