லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஒரே பாகமாக ரீ ரிலீஸ் ஆகும் பாகுபலி | படு கவர்ச்சிக்கு மாறப்போகும் ராஷ்மிகா | தக் லைப் விமர்சனம் : திரிஷா அப்செட் | தமிழர்கள் ரசனை குறைந்தவர்களா? இயக்குனர் ஞானராஜசேகரன் | அன்னை இல்லத்தில் டும்டும் : ராம்குமார் மகன் தர்ஷனுக்கு திருமணம் | திருமண வேலைகளுக்கு இடையே டப்பிங்கை முடித்த நாகார்ஜுனா | அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் தீபிகா படுகோனே | அனுஷ்கா போஸ்டரால் ஏற்பட்ட விபத்துகள் : இயக்குனர் ஓபன் டாக் | சினிமா தயாரிப்பிலும் இறங்கும் நடிகர்கள் பட்டியலில் இணைந்த ரவிமோகன் |
மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித்குமார், திரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‛விடாமுயற்சி'. ஆக்ஷன் கலந்த அதிரடி படமாக உருவாகி உள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தபடம் உலகம் முழுதும் இன்று (பிப்., 6) வெளியானது. கடைசியாக 2023 பொங்கலுக்கு அஜித்தின் 'துணிவு' படம் வெளியானது. 2 ஆண்டுகளுக்கு பிறகு அஜித் படம் வெளியாவதால், திரையிட்ட இடங்களில் ரசிகர்கள் ஆரவாரத்துடன் கொண்டாடினர்.
திரைப் பிரபலங்களான திரிஷா, ரெஜினா, இசையமைப்பாளர் அனிருத் மற்றும் அஜித்தின் அடுத்த படமான 'குட் பேட் அக்லி' இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், அப்படத்தில் உடன் நடித்த அர்ஜூன் தாஸ் ஆகியோர் ரசிகர்களுடன் இணைந்து 'விடாமுயற்சி' படத்தை கண்டு ரசித்தனர்.