மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

பரபரப்புக்கும் சர்ச்சைக்கும் பெயர்போன பிரபல பாலிவுட் இயக்குனர் ராம் கோபால் வர்மா ஹிந்தி சினிமாவில் அனைவரும் ஆச்சரியப்படத்தக்க வகையில் படங்களை கொடுத்து வந்தார். ஆனால் சமீப வருடங்களாக அவர் இயக்கும் படங்கள் எல்லாம் ஆபாச பட வகைகளாகவும் நடிகர்களின் சுயசரிதைகளை இயக்குகிறேன் என அவர்களுக்கு எதிரானதாகவும் தான் எடுத்து வந்தார். இதனால் அவரது படங்களுக்கும் ரசிகர்களிடம் வரவேற்பு குறைந்தது. இப்போது கூட பலரும் அவரது 'சத்யா' படத்தை தான் ஒரு பென்ச் மார்க் படம் போல பேசி வருகின்றனர்.
இந்த நிலையில் அடுத்ததாக 'சிண்டிகேட்' என்கிற படத்தை இயக்க இருக்கிறார் ராம்கோபால் வர்மா. ''இந்த படத்தின் மூலம் இதற்கு முன்பு கொஞ்ச நாட்களாக நான் செய்த பாவங்களை கழுவப்போகிறேன்'' என்றும் கூறியுள்ளார் ராம் கோபால் வர்மா. அது மட்டும் அல்ல இந்த படத்தில் பஹத் பாசில், விஜய்சேதுபதி போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக வந்த தகவலை உண்மை இல்லை என்றும் மறுத்துள்ளார் வர்மா.