சவாலான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பேன் : சமந்தா | மொத்தமாக ஆக்கிரமிக்கப் போகும் 'விடாமுயற்சி' | மீண்டும் தீபாவளிக்கு திரைக்கு வரும் சிவகார்த்திகேயன் படம்! | ராம்சரண் 16வது படத்தில் இருந்து ஏ.ஆர்.ரஹ்மான் வெளியேறினாரா? | பூஜா ஹெக்டேவின் நெருக்கமான காட்சிக்கு கத்தரி போட்ட சென்சார் போர்டு! | 'தி இந்தியா ஸ்டோரி' படப்பிடிப்பு துவங்கியது : சொல்லப்படாத கதை என்கிறார் காஜல் | ஹிந்தி ராமாயணா படத்தில் இணைந்த ஷோபனா! | ரஜினியை இயக்க வந்த வாய்ப்பு குறித்து பிரித்விராஜ் | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரை வெள்ளித்திரையில் ராஜகுமாரனாக்கிய “ராஜகுமாரி” | அக்ஷய்குமாரை மீட்டெடுக்கும் 'ஸ்கை போர்ஸ்' |
நடிகர் மணிகண்டன் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து அதன் பிறகு 'ஜெய் பீம், குட் நைட்' படங்களின் மூலம் அடுத்தடுத்து வெற்றிகளை பெற்று நம்பிக்கை தரும் இளம் ஹீரோக்களின் வரிசையில் இடம் பிடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் 'குடும்பஸ்தன்' என்கிற திரைப்படம் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் தான் கடந்து வந்த திரையுலக பாதை பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் மணிகண்டன் கூறும்போது, நடிகர் விஜய் சேதுபதி தனக்கு எந்த அளவிற்கு எதிர்பாராத விதமாக வாழ்நாள் உதவி செய்துள்ளார் என்பது குறித்து பகிர்ந்து கொண்டார்.
''காதலும் கடந்து போகும் படத்தில் விஜய்சேதுபதியுடன் இணைந்து ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்த போது ஒருநாள் நல்ல மழை பெய்தது. எல்லோரும் சில கூடாரங்களின் கீழ் சென்று ஒதுங்கிக் கொண்டனர். நான் மட்டும் தனியாக ஒரு சின்ன இடத்தில் ஒதுங்கி நின்றேன்.. அப்போது விஜய்சேதுபதியின் கேரவன் ரொம்ப தூரத்தில் இருந்ததால் அவரும் என்னுடன் சேர்ந்து வந்து நின்று கொண்டார். அந்த சமயத்தில் அரை மணி நேரம் என்னுடன் பேசினார். அப்போது எனது தாயாருக்கு ஆபரேஷன் செய்ய பணம் தேவைப்படுகிறது என பேச்சுவாக்கில் கூறினேன். அடுத்து என்னுடன் காரில் கிளம்பியவர் மருத்துவமனை எங்கே இருக்கு என அட்ரஸ் சொல்லு, நாம் அங்கேதான் போய் கொண்டு இருக்கிறோம் என்று கூறி என் தாயின் மருத்துவ செலவுகளை ஏற்றுக் கொண்டார்.
அதேபோல என் சகோதரியின் திருமணம் நடைபெற்றபோது விஜய்சேதுபதியை நான் முறைப்படி அழைக்கவில்லை. தகவல் மட்டுமே சொல்லி இருந்தேன். திருமண தினத்தன்று கிட்டத்தட்ட திருமணம் நிகழ்வுகள் முடிந்த நிலையில் விஜய்சேதுபதி உன் சகோதரியின் திருமணம் இன்று தானே.. எங்கே நடக்கிறது என்று கேட்டார். திருமண நிகழ்வுகள் முடிந்து விட்டதே என்று சங்கடத்துடன் கூறினேன். இருந்தாலும் நீ லொகேஷனை அனுப்பு என்று கூறி 20 நிமிடங்களில் வந்துவிட்டார்.. அப்போது நான் வேண்டாம் என்று எவ்வளவோ மறுத்தும் கூட என் கையில் 3 லட்சம் ரூபாயை திணித்து விட்டு சென்றார். ஆனால் அன்றைய தினம் திருமண செலவுக்காக நான் அந்த தொகையை வைத்து செட்டில் செய்த பிறகு மாலை என் கையில் வெறும் 700 ரூபாய் மட்டுமே இருந்தது. விஜய் சேதுபதி சமயத்தில் செய்த அந்த உதவியை மறக்கவே முடியாது'' என்று கூறியுள்ளார்.