மாதவனின் வருத்தம் | அந்தரங்க வீடியோ என வைரல் : ஸ்ருதி நாராயணன் காட்டமான பதில் | தமிழில் அடுத்தடுத்து அறிமுகமாகும் மலையாள நடிகர்கள் | தென்னிந்திய ரசிகர்களை குறை சொல்லும் சல்மான் கான் | ராஷ்மிகாவின் வாழ்நாள் பயம் இதுதான் | ரசிகரின் தந்திர கேள்வியும்... சமந்தாவின் சாதுர்ய பதிலும்...! | துல்கர் சல்மானை துப்பாக்கி முனையில் விரட்டிய வீட்டு உரிமையாளர் | மகளை பாடகி ஆக்கிய பிரித்விராஜ் | எம்புரான் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி, சல்மான் கான்? : இயக்குனர் பிரித்விராஜ் பதில் | எல் 2 எம்புரான் - முதல் நாள் வசூல் எவ்வளவு? |
பிரபல மலையாள திரைப்பட இயக்குனர் ஷபி கடந்த சில நாட்களாகவே தீவிர உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (ஜன.,26) காலமானார். மலையாள திரை உலகினரும் ரசிகர்களும் அவருக்கு தங்களது அஞ்சலி மற்றும் இரங்கலை செலுத்தினர். இவர் மலையாளத்தில் மம்முட்டி, பிரித்விராஜ், திலீப் நடித்த பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர். குறிப்பாக மம்முட்டியை வைத்து இவர் இயக்கிய 'தொம்மனும் மக்களும்' என்கிற படம் சூப்பர் ஹிட் ஆனது. ஆனால் அந்த படம் வெளியான சமயத்தில் திரை உலகில் அவருக்கு சில பக்கங்களில் இருந்து சொல்ல முடியாத சில எதிர்ப்புகள் நிலவி வந்தது. தொம்மனும் மக்களும் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றாலும் அந்த நேரத்தில் சினிமாவை விட்டும் விலகும் எண்ணத்தில் தான் தீவிரமாக இருந்தாராம் ஷபி.
இதுகுறித்து அவரே ஒரு பேட்டியில் கூறும்போது, “தியேட்டரில் அந்த படம் பார்த்து ரசிகர்கள் குலுங்கி குலுங்கி சிரித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் நானோ வீட்டில் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தேன். சினிமாவில் எனக்கான எதிர்ப்பை மீறி போராடுவதற்கு எனக்கு தெம்பு இல்லை. அதனால் சினிமாவை விட்டு விலகி நமக்கு என்ன வாய்ப்பு இருக்கிறதோ அதன்படி போவோம் என முடிவு செய்தேன். என் மனைவியும் அதைத்தான் வலியுறுத்தினார். ஆனால் ஒரு சில நாட்களில் சென்னையில் இருந்து என்னுடைய நண்பர் ஒருவர் இரவில் போன் செய்து அழைத்து நடிகர் விக்ரம் உங்களிடம் பேசுவார் என கூறினார்.
அன்று இரவே என்னிடம் பேசிய விக்ரம், தொம்மனும் மக்களும் படத்தை தான் பார்த்து விட்டதாகவும் தமிழில் அந்த படத்தை டீமேக் செய்ய விரும்புவதாகவும் அதை நானே இயக்க வேண்டும் என்றும் கூறி அழைத்தார். அவருடைய அந்த அழைப்பு என்னுடைய அந்த நேர கஷ்டங்களுக்கும் வருத்தங்களுக்கும் மிகப்பெரிய மருந்தாக அமைந்தது. கொஞ்ச நாட்களுக்கு மலையாள திரையுலகை விட்டு தமிழுக்கு வந்து பணியாற்றி எனது கவலைகளை மறந்தேன். மஜா படத்தின் மூலம் எனக்கு தமிழ் திரையுலகிலும் மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்தது” என்று கூறியுள்ளார்.
அந்த படத்தை தொடர்ந்து மீண்டும் மலையாளத்திற்கு திரும்பி சென்ற இயக்குனர் ஷபி அடுத்த 20 வருடங்களில் மலையாளத்தில் 13 படங்களை இயக்கினார். அதில் கிட்டத்தட்ட பாதிக்கு மேல் சூப்பர் ஹிட் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.