'காந்தாரா' கதாநாயகியை 'அன்பாலோ' செய்த ரிஷப் ஷெட்டி | ஜூலை மாதத்திற்குத் தள்ளிப் போன 'ஜனநாயகன்' ரிலீஸ்? | சமூக வலைத்தளங்களில் வைரலாகும் கியாரா அத்வானி | ராம் சரணின் 41வது பிறந்தநாளில் 10 லட்சம் நன்கொடை வழங்கிய சிரஞ்சீவி | அஜித் உடன் நடித்தது மறக்க முடியாத தருணம் என்கிறார் ரெஜினா | நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் |

மலையாளத் திரைப்பட இயக்குனரான ஷபி உடல்நலக் குறைவால் காலமானார். கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
உதவி இயக்குனராக சினிமா பயணத்தைத் துவக்கியவர் 2001ம் ஆண்டு 'ஒன் மேன் ஷோ' என்ற படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். பத்துக்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். நகைச்சுவைப் படங்களை எடுப்பதில் தனித்துவம் பெற்றவர்.
திலிப் நாயகனாக நடிக்க ஷபி இயக்கிய 'கல்யாணராமன், மேரிக்குன்டொரு குஞ்சாடு, டூ கன்ட்ரீஸ்' ஆகிய படங்கள் பெரும் வெற்றி பெற்றவை. 'புலிவால் கல்யாணம், தொம்மனும் மக்களும், மாயாவி, சட்டாம்பினாடு' ஆகிய படங்கள் அவரை மலையாளத்தில் முக்கிய இயக்குனராக மாற்றியது. கடைசியாக 2022ல் வெளிவந்த 'ஆனந்தம் பரமானந்தம்' என்ற படத்தை இயக்கினார்.
மலையாளத்தில் பிரபல எழுத்தாளர், இயக்குனராக இருந்த ரபி - மெக்கார்ட்டின் ஆகியோர் ரபி, ஷபியின் சகோதரர். ஷபியின் மாமா மறைந்த இயக்குனர் சித்திக்.
தமிழில் விக்ரம் நடித்த 'மஜா' என்ற படத்தையும் இயக்கியுள்ளார் ஷபி. அவரது மறைவுக்கு நடிகர் விக்ரம் இரங்கல் தெரிவித்துள்ளார். மலையாள சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.
கொச்சியில் இன்று நண்பகல் 12 மணி வரை அவரது உடல் இறுதி அஞ்சலிக்கு வைக்கப்பட்டு பின்னர் மாலை 4 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது