சான்வே மேக்னாவின் புதிய படம் | பிளாஷ்பேக்: இளையராஜாவின் ஆல்பம் இசையை பின்னணி இசையாக பயன்படுத்திய பாலுமகேந்திரா | பிளாஷ்பேக் : கடைசி வரை கஷ்டத்தில் வாழ்ந்த புஷ்பவல்லி | நிறைய சுமைகளை சுமக்காதீர்கள் : சமுத்திரகனி அட்வைஸ் | ‛நூறு சாமி' படக் கதை குறித்து பகிர்ந்த சசி | முத்து என்கிற காட்டானுக்கு பின்னால் நடந்ததையும் வெப் தொடராக எடுக்கலாம் : விஜய் சேதுபதி | ஓடிடியில் வரவேற்பைப் பெற்ற 'மேட் இன் கொரியா' | துரந்தர் : இரண்டு பாகங்களிலும் 1000 கோடி வசூலித்த முதல் இந்தியத் திரைப்படம் | பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு |

தமிழில் 2005ல் விக்ரம், அசின் நடிப்பில் வெளியான மஜா திரைப்படத்தை இயக்கியவர் பிரபல மலையாள இயக்குனர் ஷபி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென ஏற்பட்ட பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் கடந்த ஐந்து நாட்களுக்கு மேலாகவும் அவரது உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை என்று சமீபத்தில் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. இருந்தாலும் தொடர்ந்து மருத்துவக் குழுவினர் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படுமா என கண்காணித்து வருகின்றனர். அவருடைய இந்த நிலை மலையாள திரையுலகிலும் அவரது படங்களை விரும்பி ரசித்த ரசிகர்களிடமும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மலையாளத்தில் ஜனரஞ்சகமான கமர்சியலான அதேசமயம் தியேட்டருக்கு வரும் ரசிகர்களை படம் முழுக்க சிரித்து பொழுதுபோக்க வைத்து அனுப்பும் இயக்குனர்களில் ஷபிக்கும் ஒரு முக்கிய இடம் உண்டு. அப்படி மலையாளத்தில் 'கல்யாணராமன், மாயாவி, சாக்லேட், சட்டம்பி நாடு, 2 கண்ட்ரிஸ்' என பல ஹிட் படங்களை இயக்கியுள்ளார் ஷபி. பெரும்பாலும் மம்முட்டி, திலீப், பிரித்விராஜ் நடித்த படங்களையே இவர் அதிகம் இயக்கியுள்ளார். இவர் நல்லபடியாக குணமடைந்து திரும்பி வர வேண்டுமென ரசிகர்கள் பிரார்த்தித்து வருகின்றனர்.