‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து | ‛குட் பேட் அக்லி' : இளமை தோற்றத்திற்கு திரும்பும் அஜித் | தீபாவளிக்கு வெளியாகும் கவின் படம் | கனா தர்ஷனின் புதிய பட அறிவிப்பு | இளம் நாயகிகளும் பொறாமைப்படும் 'மார்கண்டேயினி' த்ரிஷா | தமிழ் ரசிகர்களைக் கவராத 'புஷ்பா… புஷ்பா…' | 'சலார்' டிவி ஒளிபரப்பு : அதிர்ச்சி தந்த டிஆர்பி ரேட்டிங் | யஷ் படத்திலிருந்து கரீனா கபூர் விலகல்? | அண்ணாமலை பயோபிக் : தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஆர்வம் | ப்ளடி பெக்கராக மாறிய கவின் |
தனுஷ்-பிரபுசாலமன் முதன்முறையாக கூட்டணி அமைத்துள்ள படம் ரயில். இந்த படத்தில் தனுசுடன் கீர்த்தி சுரேஷ், தம்பி ராமைய்யா, இமான் அண்ணாச்சி, கணேஷ் வெங்கட்ராமன் உள்பட பலர் நடிக்கின்றனர். தற்போது அனைத்து கட்ட படப்பிடிப்புகளும் முடிவடைந்து இறுதிகட்ட பணிகள் துரிதமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த படத்தில நடித்து முடித்த தனுஷ் கொடி படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
மேலும், முழுக்க முழுக்க ரயில் பயணத்தில் நடக்கும் கதை என்பதால் இந்த படத்திற்கு முதலில் தடக் தடக் என்று பெயர் வைத்திருந்த பிரபுசாலமன், அதையடுத்து ரயில் என்று வைத்தார். ஆனால் ரயில் என்ற வார்த்தைக்கு வரிவிலக்கு கிடைப்பது சாத்தியமில்லை என்று சிலர் சொன்னதை அடுத்து, இப்போது அந்த டைட்டீலையும் மாற்ற முடிவு செய்திருக்கிறாராம். அதனால், தற்போது வேறு சில டைட்டீல்களை முடிவு செய்து வைத்திருக்கும் பிரபுசாலமன், படம் சென்சாருக்கு போகும்போது ரயில் டைட்டீலுக்கு வரிவிலக்கு கிடையாது என்று சொல்லும்பட்சத்தில் கதைக்கு பொருத்தமான வேறு டைட்டீலை வைக்க முடிவு செய்திருக்கிறாராம். ஆக, ரயில் டைட்டீல் தற்காலிகமானதுதானாம்.