சனாதன தர்மம் இளைஞர்களிடம் போய் சேரணும் : சென்னையில் நடிகர் பாலகிருஷ்ணா பேச்சு | ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இணைந்த மோகன்லால் | கல்கி 2898 ஏடி 2 படம் : தீபிகாவிற்கு பதில் பிரியங்கா சோப்ரா | மீண்டும் சுதா இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் | ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் ஓ சுகுமாரி | குட் பேட் அக்லி... இளையராஜா பாடல் விவகாரம் : மனு தள்ளுபடி | நடிகர் திலீப்பின் ராசி... தர்ஷனுக்கும் கை கொடுக்குமா? டிசம்பர் 11ல் தெரியும் | மோகன்லாலை மீண்டும் இயக்கும் தொடரும் பட இயக்குனர் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | ஜெயிலர் 2விலும் தொடர்கிறார் விநாயகன் | ‛பார்டர் 2'வில் தில்ஜித் தோசன்ஜ் முதல் பார்வை வெளியீடு |

தாமிரபரணி, பூஜை படங்களுக்கு பின் இயக்குனர் ஹரி - நடிகர் விஷால் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் ‛ரத்னம்'. பிரியா பவானி சங்கர் நாயகியாக நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் சமுத்திரகனி, கவுதம் மேனன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். ஆக்ஷன் பாணியில் இந்தப்படம் தயாராகி உள்ளது.
வரும் ஏப்., 26ல் படம் திரைக்கு வர உள்ள நிலையில் ரத்னம் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. டிரைலர் முழுக்க முழுக்க விஷாலின் ஆக்ரோஷமான ஆக்ஷன் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. நாயகி பிரியா பவானி சங்கரை ஒரு கும்பல் கொல்ல துடிக்கிறது. அவர்களிடமிருந்து பிரியாவை காப்பாற்றும் விஷால் எதிரிகளை எப்படி பந்தாடுகிறார் என்பதே கதைக்களமாக இருக்கும் என டிரைலரை பார்க்கையில் புரிகிறது. ஹரியின் வழக்கமான ஆக்ஷன், மசாலா மற்றும் அரிவாள் கலாச்சாரங்கள் இந்த படத்திலும் இடம் பெற்றுள்ளன.
அதேசமயம் சமீபகாலமாக முன்னணி நடிகர்களின் படங்களின் டிரைலரில் கெட்டவார்த்தை இடம் பெறுவது தொடர்கதையாகி வருகிறது. இந்த படத்திலும் இரண்டு இடங்களில் கெட்டவார்த்தை இடம் பெற்றுள்ளது. இது சென்சார் செய்யப்படாத டிரைலர் காட்சி என்பதால் அப்படியே விட்டுவிட்டார்களா அல்லது இதை வைத்து எதுவும் பப்ளிசிட்டி கிடைக்கும் என எதிர்பார்க்கிறார்களா என தெரியவில்லை.
டிரைலர் லிங்க் : https://www.youtube.com/watch?v=X6srnSdOJU8