'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில், விஜய், பிரஷாந்த், பிரபுதேவா, மீனாட்சி சவுத்ரி, சினேகா, லைலா மற்றும் பலர் நடிக்கும் 'தி கோட்' படத்தின் முதல் சிங்கிளான 'விசில் போடு' பாடல் ஏப்ரல் 14ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியானது.
24 மணி நேரத்தில் இப்பாடல் புதிய சாதனையை யு டியூபில் படைத்துள்ளது. இதுவரை வெளிவந்த பாடல்களில் விஜய் நடித்த 'பீஸ்ட்' படப் பாடலான 'அரபிக்குத்து' பாடல் 24 மணி நேரத்தில் 23.7 மில்லியன் பார்வைகளைப் பெற்று முதலிடத்தில் இருந்தது. 'விசில் போடு' பாடல் 24.8 மில்லியன் பார்வைகளைப் பெற்று அந்த சாதனையை முறியடித்துள்ளது.
இருப்பினும் பாடலுக்கான லைக்குகளில் 'விசில் போடு' பின்தங்கிவிட்டது. 'அரபிக்குத்து' பாடலுக்கு 24 மணி நேரத்தில் 2.20 மில்லியன் லைக்குகள் கிடைத்தது. ஆனால், 'விசில் போடு' பாடலுக்கு 1.25 மில்லியன் லைக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது.
இருவிதமான விமர்சனங்களைப் பெற்று இந்த பாடல் தற்போது 30 மில்லியன் பார்வைகளைக் கடந்து டிரெண்டிங்கில் முதலிடத்திலும் உள்ளது.