‛பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீ மேக்கான ‛தடக் 2' டிரைலர் வெளியீடு, ஆக., 1ல் ரிலீஸ் | சிவகார்த்திகேயன் 24வது படம் தள்ளிப்போகிறதா? | தனுஷ் 54வது படத்தில் இணைந்தது குறித்து பிரித்வி பாண்டியராஜன் நெகிழ்ச்சி! | சிவராஜ் குமாரின் 131வது படம் அறிவிப்பு | 'லியோ'வில் என்னை வீணாக்கினார் லோகேஷ் : சஞ்சய் தத் கமெண்ட் | 68 வயதில் 3 நடிகைகளுடன் டான்ஸ் : கெட்ட ஆட்டம் போட்ட மொட்ட ராஜேந்திரன் | ஆடி வெள்ளி ரீமேக்கில் நயன்தாராவுக்கு பதில் திரிஷா | இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? |
தமிழக பாஜக தலைவராக இருப்பவர் அண்ணாமலை. ஐபிஎஸ் முடித்து கர்நாடக மாநிலத்தில் போலீஸ் அதிகாரியாகப் பணியாற்றினார். 2018ல் பெங்களூரு தெற்கு, துணை ஆணையராகப் பதவி வகித்தார். அதன்பின் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலுக்கு வந்தார். பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து சில ஆண்டுகளில் தமிழக பாஜக தலைவராக உயர்ந்தார்.
லோக்சபா தேர்தலில் கோவை தொகுதி வேட்பாளராக பாஜக சார்பில் போட்டியிடுகிறார். இவரது பயோபிக் படத்தில் விஷால் நடிக்க உள்ளதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அப்படத்தை ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கப் போகிறாராம். தேர்தல் முடிவுகள் வந்த பின் அது பற்றிய அறிவிப்பு வரலாம் என்கிறார்கள். கோவை தொகுதியில் அண்ணாமலை வெற்றி பெற்றுவிட்டால் பயோபிக் பற்றிய அறிவிப்பு உறுதி என தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அவரது நெருங்கிய வட்டாரங்களில் சொல்லி வருகிறாராம்.
கரூர் மாவட்டம் கிராமம் ஒன்றிலிருந்து படித்து வளர்ந்து, ஐபிஎஸ் முடித்து, கர்நாடகா மாநிலத்தில் போலீஸ் அதிகாரியாகப் பணியாற்றி, தமிழக பாஜக தலைவராக இருக்கிறார் அண்ணாமலை. ஒரு திரைப்படத்திற்குரிய கதை இவரது வாழ்க்கையில் இருக்கிறது. அதனால் கமர்ஷியல் படமாகக் கூட இதை உருவாக்க முடியும் என தயாரிப்பு வட்டாரங்களில் பேசிக் கொள்கிறார்களாம்.
ஏற்கெனவே ஒரு பேட்டியில் ஈபிஎஸ்-ஆ, ஓபிஎஸ்-ஆ என்ற கேள்விக்கு 'ஐபிஎஸ்' என பதிலளித்தவர் நடிகர் விஷால். பாஜகவிற்கு ஆதரவான நடிகர் விஷால். எனவே, அவரும் அண்ணாமலை பயோபிக்கில் நடிக்க உடனடியாக சம்மதிப்பார் என்கிறார்கள்.