அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு | இப்போதைக்கு லோகா.. அடுத்து இன்னொரு படம் வரும் : பிரித்விராஜ் ஆருடம் | திரிஷ்யம் 3 மலையாளத்தில் தான் முதலில் வெளியாகும் : ஜீத்து ஜோசப் திட்டவட்டம் | பாலிவுட் நடிகருக்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி | நடிகர் சிவகுமாருக்கு கவுரவ டாக்டர் பட்டம் |

இளன் இயக்கத்தில் நடிகர் கவின் 'ஸ்டார்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். மே 10ல் இந்த படம் வெளியாகிறது. அடுத்து சதீஷ் கிருஷ்ணன் இயக்கத்தில் 'கிஸ்' என்கிற புதிய படத்திலும் நடித்து வருகிறார்.
இதுஅல்லாமல் இயக்குனர் நெல்சன் முதல் முறையாக பிலாமென்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கும் படத்தில் கவின் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படத்திற்கு ' ப்ளடி பெக்கர்' என தலைப்பு வைத்துள்ளதாக இன்று புரொமோ வீடியோ உடன் அறிவித்துள்ளனர். இப்படத்தை நெல்சனின் உதவி இயக்குனர் சிவபாலன் என்பவர் இயக்குகிறார். ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார்
ஏற்கனவே இதன் படப்பிடிப்பு சென்னை, மைசூர் போன்ற பகுதிகளில் நடைபெற்றுள்ளது. இதில் கதாநாயகியாக அக்ஷயா நடிக்கிறார். ஜெயிலர் தன்ராஜ், அனார்கலி நாசர், ரெட்டின் கிங்ஸ்லி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.