'ஜனநாயகன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு | சத்ய சாய் பாபாவின் மகிமையை சொல்லும் ‛அனந்தா' : நவ., 23ல் வெளியீடு | கிஸ் முதல் நெட்வொர்க் வரை... இந்த வாரா ஓடிடி ரிலீஸ்...! | ''பீரியட் படம் பண்ணுவது தனி அனுபவம்... டைம் மிஷின் மூலம் அந்த காலம் செல்வது மாதிரி'': துல்கர் சல்மான் | ரோஜா 'கம்பேக்': 'லெனின் பாண்டியன்' படத்தில் நடிக்கிறார் | மணிரத்னம் படம் : சிம்புவிற்கு பதில் விஜய் சேதுபதி | ரஜினிகாந்த்தை 'தலைவர்' எனக் குறிப்பிட்ட கமல்ஹாசன் | ஹரிஷ் கல்யாண் அடுத்து நடிக்கும் இரண்டு படங்கள் | நவம்பர் 21ல் திரைக்கு வரும் ‛தீயவர் குலை நடுங்க' | படப்பிடிப்புக்காக ஹனிமூனை மாற்றிய ஹீரோ |

பான் இந்தியா நடிகர் என தெலுங்கு நடிகர் பிரபாஸை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். 'பாகுபலி 2' படத்திற்குப் பிறகு அவர் நடித்து வெளிவந்த எந்த ஒரு பான் இந்தியா படமும் பெரிய அளவில் வசூலித்து வெற்றி பெறவில்லை. பல கோடிகள் நஷ்டத்தைத்தான் தந்தது. இருந்தாலும் தொடர்ந்து சில பான் இந்தியா படங்களில் நடித்து வருகிறார் பிரபாஸ்.
'கேஜிஎப்' இயக்குனரான பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்த 'சலார்' படம் சமீபத்தில் டிவியில் முதல் முறையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. ஆனால், அதன் டிஆர்பி ரேட்டிங் மிகவும் குறைவாக வந்து அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 6.52 ரேட்டிங் மட்டுமே அதற்குக் கிடைத்துள்ளது.
தெலுங்கில் சமீபத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்ட மற்ற படங்களைக் காட்டிலும் இதற்கு இவ்வளவு குறைவான ரேட்டிங் கிடைத்திருப்பது பிரபாஸ் ரசிகர்களுக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐபிஎல் போட்டிகள்தான் அதற்குக் காரணம் என்று கூறுகிறார்கள்.