நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
ஞானவேல் இயக்கத்தில் ‛வேட்டையன்' படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இந்த பட படப்பிடிப்புக்காக சில தினங்களுக்கு முன் மும்பை சென்ற ரஜினி அங்கு அமிதாப் உடன் சில காட்சிகளில் நடித்தார். இருவரின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின. இந்நிலையில் அங்கு படப்பிடிப்பை முடித்து கொண்டு விமானத்தில் சென்னை திரும்பினார் ரஜினி.
விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, ‛‛வேட்டையன் படப்பிடிப்பு பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது. கூலி டீசருக்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது. காப்புரிமை விவகாரம் இசையமைப்பாளருக்கும், தயாரிப்பாளருக்கும் இடையே உள்ள பிரச்னை. அதை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்'' என்றார்.
வேட்டையன் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கூலி' படத்தில் ரஜினி நடிக்கிறார். சமீபத்தில் படத்தின் டைட்டில் டீசர் வெளியானது. இதில் ரஜினி நடிப்பில் இளையராஜா இசையில் வெளியான ‛தங்கமகன்' படத்தின் டிஸ்கோ பாடலை அனுமதியின்றி பயன்படுத்தியதாக கூலி படக்குழுவிற்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பி இருந்தார். அது தொடர்பான கேள்விக்கு இப்படி பதில் கூறி உள்ளார் ரஜினி.