பிளாஷ்பேக் : பாரதிராஜா இயக்கதில் நடிக்க மறுத்த சன்னி தியோல் | பாரிஜாதம் : புதிய தொடரில் ஆலியா மானசா | 50 பேர் ஆசீர்வாதத்தால் கிடைத்த வாய்ப்பு: நமிதா நெகிழ்ச்சி | ஜெய் படம் மூலம் தமிழுக்கு வரும் கன்னட நடிகை | ஆண்ட்ரியா படத்தின் காட்சிகளை மாற்ற நீதிமன்றம் உத்தரவு | ஓடிடியில் இந்தவாரம் ரிலீஸ் என்ன... | பிரபுதேவாவின் வெப்தொடரின் பெயர் என்ன | அக்., 31ல் விஷ்ணு விஷாலின் ‛ஆர்யன்' ரிலீஸ் | பிளாக் மெயில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | தெலுங்கு திரையுலகை விட்டு ஒதுங்கியது ஏன்? : கமாலினி முகர்ஜி |
கீத்து மோகன்தாஸ் இயக்கத்தில் 'கேஜிஎப்' நடிகரான யஷ் நடித்து வரும் படம் 'டாக்சிக்'. இப்படத்தில் யஷ் சகோதரியாக நடிக்க ஹிந்தி நடிகை கரீனா கபூர் நடிப்பதாக இருந்தது. ஆனால், மற்ற படங்களின் தேதிகள் காரணமாக தற்போது இப்படத்தில் நடிப்பதிலிருந்து கரீனா விலகிவிட்டாராம். அவருக்குப் பதிலாக யாரை நடிக்க வைப்பது என ஆலோசித்து வருவதாகத் தகவல்.
நயன்தாரா அக்கதாபாத்திரத்தில் நடித்தால் பொருத்தமாமக இருக்கும் என அவரிடம் பேசி வருகிறார்களாம். நயன்தாராவிற்கும் அக்கதாபாத்திரத்தில் நடிக்க விருப்பமாக உள்ளது என தகவல். அந்த அளவிற்கு மிகவும் அழுத்தமான கதாபாத்திரமாக அது உருவாக்கப்பட்டுள்ளதாம்.
இப்படத்தில் யஷ் ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கலாம் என்றும் ஒரு தகவல். 2025 ஏப்ரல் 10ம் தேதி இப்படம் வெளியாக உள்ளது. விரைவில் படத்தில் நடிக்க உள்ள மற்ற நடிகைகள் குறித்த அப்டேட் வரலாம்.