செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
கேஜிஎப் படங்களின் மாபெரும் வெற்றிக்கு பின் இந்தியா முழுக்க பிரபலமானார் நடிகர் யஷ். தற்போது மலையாள இயக்குனர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் தனது 19வது படமாக 'டாக்சிக்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரிக்கின்றனர். யஷ்ஷிற்கு அக்கா கதாபாத்திரத்தில் நடிகை நயன்தாரா மற்றும் கதாநாயகியாக கியாரா அத்வானி, ஹூமா குரேஷி ஆகியோர் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கன்னடம் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளில் படமாக்கி வருகின்றனர். பிறமொழிகளில் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர். பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இப்படம் இந்தாண்டுக்குள் வெளியாகும் என கூறப்பட்டது. தற்போது அடுத்தாண்டு, 2026 மார்ச் 19ம் தேதி அன்று திரைக்கு வருகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.