அட்லி படத்தில் நடிக்க அல்லு அர்ஜுனுக்கு 175 கோடி சம்பளமா? | விமானத்தில் செல்லும்போது மொபைலை தொலைத்த பூஜா ஹெக்டே! | விக்ரமின் 'வீர தீர சூரன்' படத்தின் சென்சார், ரன்னிங் டைம் வெளியானது! | 75 நாட்களில் திரைக்கு வரும் தக்லைப்! போஸ்டர் வெளியிட்ட படக்குழு!! | வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் ‛தி வெர்டிக்ட்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பயங்கரவாத சம்பவங்களை ஒப்பிட்டு கடலோர மக்களுக்காக ரஜினி வீடியோ வெளியீடு | ஜூன் மாதத்தில் துவங்கும் சூர்யா 46 படப்பிடிப்பு! | கார்த்திக்கு ஜோடியாகும் கல்யாணி பிரியதர்ஷன்! | 'எல் 2 எம்புரான்' படத்தின் பட்ஜெட் இவ்வளவுதானா ? | அஜித், தனுஷ் கூட்டணியை உறுதி செய்த தயாரிப்பாளர்! |
‛ஓ மை கடவுளே' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே வரவேற்பை பெற தொடர்ந்து பிரதீப் ரங்கநாதனை வைத்து டிராகன் படத்தை இயக்கினார். சமீபத்தில் வெளியான இப்படம் ரூ.150 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. அடுத்தப்படியாக நடிகர் சிம்புவின் படத்தை இயக்க போகிறார். இதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் சில தினங்களாக சிம்பு படத்திற்கு பின் தனுஷ் படத்தை இவர் இயக்க போவதாக செய்தி பரவியது. இதை மறுத்துள்ள அஸ்வத், ‛‛எனது அடுத்த படங்கள் பற்றிய வதந்திகளை பரப்பாதீங்க. என் அடுத்த படம் முடிவாகும்போது அதை நானே முதலில் உங்களுடன் பகிர்வேன்'' என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.