'ரெட்ரோ' : ரெமான்ஸ் படமாம், ஆக்ஷன் படம் இல்லையாம்… | ககொ ககொ - கா கா, விரைவில் ரீ ரிலீஸ் | 'தொடரும்' வரவேற்பு : மோகன்லால் அன்புப் பதிவு | நானிக்காக அனிருத் பாடிய தானு பாடல் வெளியீடு | பீனிக்ஸ் வீழான் ஜூலை நான்காம் தேதி ரிலீஸ் | கேங்கர்ஸ் படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | விஜய் சேதுபதியுடன் மோதும் பஹத் பாசில் | சூர்யா 46வது படத்தின் படப்பிடிப்பு எப்போது | இட்லி கடை படத்தின் அப்டேட் தந்த அருண் விஜய் | மதகஜராஜா ; சுந்தர் சி சொன்ன வார்த்தை பலித்துவிட்டது : சந்தானம் |
வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் இருக்கிறது. இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 5 மொழிகளில் வெளியாகிறது. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை கே.வி.என் நிறுவனம் 400 கோடி பட்ஜெட்டில் தயாரித்து வருகிறது.
இந்நிலையில் தற்போது இந்த ஜனநாயகன் படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு, இப்படத்தின் தமிழ்நாடு தியேட்டர் வெளியீட்டு உரிமையை செவன் ஸ்கிரீன் 100 கோடிக்கும், வெளிநாட்டு உரிமையை பார்ஸ் நிறுவனம் 78 கோடிக்கு வாங்கி இருப்பதாகவும் அப்பட வட்டாரங்களில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இது தவிர தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற மொழிகளுக்கான வியாபாரமும் தற்போது பேசப்பட்டு வருகிறதாம். அதோடு அடுத்த மாதத்தோடு இப்படத்தின் அனைத்துகட்ட படப்பிடிப்பு முடிவடைந்து விடும் என்றும் கூறுகிறார்கள்.