'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
சமீபகாலமாக ஆன்லைன் சூதாட்டத்தால் ஏராளமானோர் தங்களது பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்ளும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறார்கள். இதன்காரணமாகவே இதுபோன்ற சூதாட்ட செயலிகளை பிரபலப்படுத்தக்கூடிய விளம்பரங்களில் நடிகர் நடிகைகள் நடிப்பதற்கு கடும் எதிர்ப்பு எழுந்து வருகிறது. நடிகர் சரத்குமார்கூட இதுகுறித்த ஒரு சர்ச்சையில் சிக்கினார்.
இந்நிலையில் தற்போது சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்ததற்காக நடிகர்கள் பிரகாஷ்ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா, நடிகை நிதி அகர்வால் உள்ளிட்ட 25 பேர் மீது தெலுங்கானா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது. அதையடுத்து தனது செயலுக்கு மன்னிப்பு கோரி நடிகர் பிரகாஷ்ராஜ் தனது இணைய பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், கடந்த 2016ம் ஆண்டு ஒரு சூதாட்டம் செயலி விளம்பரத்தில் நடித்தேன். ஆனால் அதில் நடித்த பிறகுதான் என்னுடைய தவறை உணர்ந்தேன் . என்றாலும் 9 ஆண்டுகளுக்கு முன்பு நான் செய்த தவறுக்காக இப்போது மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இளைஞர்கள் இது போன்ற சூதாட்ட செயலியை பயன்படுத்தி பணத்தை இழக்க வேண்டாம் என்று அந்த வீடியோவில் கேட்டுக் கொண்டுள்ளார் பிரகாஷ்ராஜ்.