சிரஞ்சீவி படத்தை தயாரிக்கும் நானி | 'லவ் டுடே' பாணியில் உருவாகும் 'ரிங் ரிங்' | ''மனைவியின் பேச்சை கேளுங்க'': கணவன்மார்களுக்கு அட்வைஸ் செய்த அபிஷேக் பச்சன் | விமல் ஜோடியாக மீண்டும் நடிக்கும் சாயாதேவி | நடிப்புக்கு முழுக்கா?: நடிகர் விக்ராந்த் மாஸே திடீர் 'பல்டி' | 'மழையில் நனைகிறேன்' விஜய்சேதுபதி நடிக்க வேண்டிய படம் : இயக்குனர் தகவல் | பிளாஷ்பேக் : இயக்குனராக மேஜர் சுந்தர்ராஜன் | பிளாஷ்பேக்: இந்தியாவின் முதல் அந்தாலஜி படம் | நடிகர் மன்சூர் அலிகான் மகன் கைது | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரை நாடாள வைத்த “நாடோடி மன்னன்” உருவான பின்னணி |
கவின் நடிப்பில் அடுத்து ‛ஸ்டார்' படம் வெளியாக உள்ளது. நடன இயக்குனர் சதீஷ் கிருஷ்ணன் முதல் முறையாக இயக்குனர் ஆக நடிகர் கவினை வைத்து 'கிஸ்' என்கிற படத்தை இயக்கி வருகிறார். ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கின்றார் .
கடந்த சில மாதங்களாக இதன் படப்பிடிப்பு பல கட்டமாக சென்னையில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இதன் படப்பிடிப்பு நிறைவு பெற்று இன்னும் ஒரு பாடல் காட்சிகள் மட்டும் மீதமுள்ளது . இதற்காக பிரமாண்டமான அரங்கம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அடுத்த வாரத்தில் இதன் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என்கிறார்கள். மேலும், இப்படத்தை இவ்வருட தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டுள்ளனர்.