20 ஆண்டுகளாக தோழிகளாக வலம்வரும் திரிஷா - சார்மி! | 'குபேரா' படத்தின் புதிய அப்டேட்! | அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் |
நடிகர் தர்ஷன் கனா படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன் பிறகு துணிவு உள்ளிட்ட சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சின்னத்திரையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.
இப்போது சிறிய இடைவெளிக்குப் பிறகு தர்ஷன் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தை அறிவித்துள்ளனர். அதன்படி, புதுமுக இயக்குனர் ராஜவேல் இயக்கத்தில் தர்ஷன், ஹர்ஷா பைஜூ என இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். காளி வெங்கட், வினோதினி, தீனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
காமெடி கலந்த பேண்டஸி கதை களத்தில் உருவாகும் இப்படத்தை சவுத் ஸ்டுடியோஸ் என்கிற நிறுவனம் தயாரிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் துவங்கியது.