இயக்குனர் ராஜ் நிடிமொருவை 2வது திருமணம் செய்தார் சமந்தா | நடிகை கனகா தந்தையும் இயக்குனருமான தேவதாஸ் காலமானார் | ஹிருது ஹாருன் ஜோடியான சம்யுக்தா விஸ்வநாதன் | ஹீரோயின் ஆன 'பிக்பாஸ்' ஜனனி | பிளாஷ்பேக்: திருமண நாளில் படங்களை வெளியிட்ட கே.பாலாஜி | பிளாஷ்பேக்: மின்னி மறைந்த ஸ்ரீராம் | ஹிந்தியில் படத்துக்கு வரவேற்பு: புனேவுக்கு நடிகர் தனுஷ் விசிட் | தயாரிப்பாளர் ஆனார் 'டாடா' இயக்குனர்: கவுதம் ராம் கார்த்திக் அதில் ஹீரோ | 10 ஆயிரம் கண்டெயினர் யார்டில் படமாக்கப்பட்ட 'அனலி' | 'மகாசேனா'வில் அம்மாவாக நடிக்கும் சிருஷ்டி டாங்கே |

சின்னத்திரையில் அறிமுகமாகி ‛டாடா' படம் மூலம் புகழ் வெளிச்சம் பெற்றவர் நடிகர் கவின். அதேப்போல் 'பியார் பிரேமா காதல்' படம் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் இயக்குனர் இளன். இவர்கள் இருவரும் இணைந்து பயணித்துள்ள படம் ‛ஸ்டார்'. அதிதி பொஹங்கர், பிரீத்தி முகுந்தன், லால், லொள்ளு சபா மாறன், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.
இப்படத்தின் முதல்பார்வை மற்றும் பாடல்கள் வெளியாகி மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்திருக்கிறது. அதிலும் நடிகர் கவின் பெண்ணாக தோன்றும் பாடல் காட்சி.. ரசிகர்களிடத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டிருக்கிறது. ஒரு சாதாரண இளைஞன் சினிமாவில் ஸ்டாராக ஆக துடிக்கும் கதை என டிரைலரை பார்க்கையில் புரிகிறது. அதற்கு வரும் தடைகள், நடுத்தர குடும்பத்து மக்களின் வாழ்க்கை முறை ஆகியவற்றை கலந்து ரசிகர்களை கவரும்படியான பல காட்சிகள், வசனங்களுடன் இந்த டிரைலர் உள்ளதால் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக கவினின் பல்வேறு விதமான தோற்றங்கள், அவரின் உணர்ச்சி பெருக்கான நடிப்பு, உயிரோட்டம் தரும் யுவனின் பின்னணி இசை ஆகியவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. தற்போது இந்த டிரைலர் வைரலாகி வருகிறது. மே 10ல் படம் வெளியாகிறது.
டிரைலர் லிங்க் : https://www.youtube.com/watch?v=5QlTZEogGrE




