அமரன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பு
ஏப் 27, 2024
Advertisement
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் "அமரன்" என்கிற படத்தில் நடித்து வருகிறார். வீர மரணம் அடைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜான் வாழ்க்கை வரலாற்று படமாக இப்படம் உருவாகி வருகிறது. இதில் கதாநாயகியாக சாய் பல்லவி நடித்துள்ளார். ராஜ்கமல் நிறுவனம், சோனி பிக்சர்ஸ் என இரு நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
ஏற்கனவே இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு நிறைவு பெற்ற நிலையில் இப்போது இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட அரங்கில் தொடங்கியுள்ளனர். இது பெரும்பாலும் கிளைமாக்ஸில் இடம் பெறும் ஆக்ஷன் காட்சிகள். இதனை ஸ்டன்ட் இயக்குனர்கள் அன்பறிவு உருவாக்கி வருகின்றனர் என கூறப்படுகிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!