மலையாள திரையுலகில் உருவாகிறது புதிய சங்கம்? | மும்பையில் ரூ.30 கோடி மதிப்பில் வீடு வாங்கிய பிரித்விராஜ் | தர்ஷன் இருந்த சிறைப்பகுதியில் சோதனை ; 15 செல்போன், 7 ஸ்டவ், 5 கத்திகள் சிக்கின | கூலி படப்பிடிப்பு தளத்தில் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய ரஜினி | ஓணம் கொண்டாட்டத்தில் மகனை அறிமுகப்படுத்திய அமலா பால் | ஜானி மாஸ்டர் கைது செய்யப்படுவாரா ? | 400 கோடி வசூலைக் கடந்த 'தி கோட்' | சூர்யாவின் கங்குவா ரிலீஸ் - இரண்டு தேதிகளை திட்டமிடும் படக்குழு! | டிசம்பரில் வெளியாகும் வெங்கட் பிரபுவின் பார்ட்டி! | கிறிஸ்துமஸ்க்கு வெளியாகும் அஜித்தின் விடாமுயற்சி! |
இசையமைப்பாளர் தேவா அவ்வப்போது இசையமைப்பதோடு, சில படங்களில் பின்னணியும் பாடி வருகிறார். இந்த நிலையில் சென்னையில் உள்ள ஒரு பள்ளி விழாவில் கலந்து கொண்ட அவர், அதையடுத்து மீடியாக்களை சந்தித்தார். அப்போது மணிரத்னம் எப்படி காலத்துக்கு தகுந்தார் போல் தன்னை மாற்றிக் கொண்டு வருகிறாரோ அதேபோன்று நானும் என்னை மாற்றிக் கொண்டு வருகிறேன். அப்போதுதான் இந்த சினிமாவில் நீடித்திருக்க முடியும் என்று கூறிய இசையமைப்பாளர் தேவா, நடிகர் தனுஷ், தான் இயக்கி நடித்திருக்கும் ராயன் படத்தில் வில்லனாக நடிப்பதற்கு எனக்கு அழைப்பு விடுத்தார். உங்களைப் போன்று சென்னை பாஷை பேசுவதற்கு இப்போதைக்கு யாருமே இல்லை என்றும் கூறினார்.
ஆனால் நடிப்பு எனக்கு வராது என்று சொல்லி மறுத்து விட்டேன். காரணம், தெரிந்த தொழிலை விட்டவனும் கெட்டான். தெரியாத தொழிலை தொட்டவனும் கெட்டான் என்று கூறிய தேவாவிடத்தில், மீண்டும் ரஜினி படத்துக்கு இசையமைப்பீர்களா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, இறைவனின் அருள் இருந்தால் கண்டிப்பாக அது நடக்கும் என்று தெரிவித்தார்.