அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்துள்ள இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே கமல்-மனிஷா கொய்ராலா சம்பந்தப்பட்ட சில காட்சிகள் அடுத்து படமாக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார்.
இந்த நிலையில் இன்று தமிழ் புத்தாண்டு என்பதால் இந்தியன்-2 படத்தின் போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், இந்தியன் தாத்தா கமல்ஹாசன் இரண்டு விதமான கெட்டப்புகளில் தோன்றுகிறார். மேலும் ஜூன் மாதம் இப்படம் திரைக்கு வருவதால் டீசர், டிரைலர், இசை வெளியீட்டு விழாக்கள் குறித்த அறிவிப்புகளும் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.