2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

தனது 50 வது படமான ராயனை இயக்கி, நடித்துள்ள தனுஷ், அதையடுத்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இன்னொரு பக்கம் சேகர் கம்முலா இயக்கும் குபேரா என்ற பான் இந்தியா படத்திலும் நடித்து வருகிறார். தனுஷ் உடன் நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. மும்பையில் உள்ள தாராவியில் நடக்கும் கதையில் இப்படம் உருவாகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது, தெலுங்கு தயாரிப்பாளர் நரேந்திரா என்பவர் தெலுங்கானா திரைப்பட வர்த்தக சபையில் குபேரா என்ற டைட்டிலை ஏற்கனவே பதிவு செய்து வைத்திருப்பதாகவும், இந்த குபேரா டைட்டிலை மாற்றாவிட்டால் தனுஷ் - சேகர் கம்முலா படக்குழு மீது வழக்கு தொடரப்படும் என்று தெரிவித்திருக்கிறார். இந்த விவகாரம் டோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.