பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி | 2025 - வசூல் படங்களில் முதலிடத்தைப் பிடிக்குமா 'காந்தாரா சாப்டர் 1' ? | விஷால் - சுந்தர் சி கூட்டணி படத்தின் அறிவிப்பு… விரைவில்… | மனிஷாவுக்கு கை கொடுக்குமா 'மெஸன்ஜர்' | பிளாஷ்பேக் : 'ஷோலே' படத்தை தழுவி உருவான 'முரட்டு கரங்கள்' | பிளாஷ்பேக்: காப்பி ரைட் வழக்கில் சிக்கிய சிவாஜி படம் | இந்தியா, ஆசியான் திரைப்பட விழா: சென்னையில் தொடங்கியது | முதல் நாள் வசூலில் முந்தும் 'டியூட்' | அஜித் 64 : தீபாவளி அறிவிப்பு? |
காலநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமயமாதல் குறித்த குறும்படமான "காலம் மாறுமா" (சென்னை வெள்ளத்தை அடிப்படையாகக் கொண்ட கதை)-க்கு 2024 ம் ஆண்டிற்கான அமீரக தமிழ் குறும்பட விழாவில் சிறந்த படத்துக்கான சிறப்பு விருது பெற்றது.
துபாய், ஈரானியன் கிளப்பில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் நடுவராகப் தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகை குட்டி பத்மினி பங்கேற்றார். சிறுவயதிலேயே சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை உண்டாக்கியதற்காக இக்குறும்படத்தை உருவாக்கிய துபாயில் வசிக்கும் தமிழக மாணவர்களாகிய அனன்யா மணிகண்டன் மற்றும் ஷியாம் மணிகண்டனை பாராட்டினார்.
மேலும் கல்லிடைக்குறிச்சி முனைவர் ஆ.முகமது முகைதீன், ‛‛இது ஐக்கிய நாடுகள் சபையின் (UN STG) நிலையான வளர்ச்சி இலக்கு மற்றும் குறிக்கோளின் 13வது இலக்கு ஆகும். அதைப்பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு சென்றடைய வேண்டும்'' என கூறி இந்த குறும்படத்தையும், மாணவர்களது முயற்சியையும் பாராட்டினார்.