என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு, தருண் கார்த்திகேயன் என்பவருடன் இரு தினங்களுக்கு முன் திருமணம் நடந்தது. முதல்வர் ஸ்டாலின், ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன், மணிரத்னம், விக்ரம், நயன்தாரா, விக்னேஷ் சிவன், ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால், லோகேஷ் கனகராஜ், அனிருத், ஏஆர் ரஹ்மான், சிரஞ்சீவி, ராம்சரண் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்களும் நேரில் சென்று மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். வரவேற்பிலும் நிறைய திரைப்பிரபலங்கள் பங்கேற்று வாழ்த்தினர்.
மணமகன் தருண் கார்த்திகேயன், இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனர் என்று தான் இதுவரை தகவல் வந்தது. உண்மையில் அவர் ஷங்கரின் உதவியாளரே அல்ல. அமெரிக்காவில் ஐடி படித்தவர். இவரது அப்பா அமெரிக்காவில் ஐடி கம்பெனி நடத்தி வருகிறார். சினிமாவில் பணியாற்ற ஆசை வர இந்தியா வந்துள்ளார். இயக்குனர் ஹரியும், தருணின் தந்தையும் நண்பர்கள். அந்த நட்பால் ஹரியிடம் ‛ரத்னம்' படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார் தருண். இந்த தகவலை பத்திரிக்கையாளர்களிடம் பகிர்ந்து கொண்டார் தருண். மேலும் தருண், நடிகை நளினியின் உறவினரும் ஆவார்.