தொடரும் பூரி ஜெகன்னாத், சார்மி தயாரிப்பு நட்பு : விஜய் சேதுபதி ஹீரோ | ஷங்கர் அடுத்து 'அவுட்டேட்டட்' பட்டியலில் இணைந்த ஏஆர் முருகதாஸ் | சர்தார் 2 - யுவனுக்குப் பதிலாக சாம் சிஎஸ் | எல் 2 எம்புரான் - 2 நிமிடக் காட்சிகள் நீக்கம் | தனுஷ், விக்னேஷ் ராஜா படத்தில் இணைந்த ஜெயராம்! | அஜித்தின் புது அவதாரம்: ஆதிக் பகிர்ந்த போட்டோ வைரல் | 'எல் 2 எம்புரான்' சர்ச்சை: மோகன்லால் புதிய பதிவு | வி.ஜே. சித்து இயக்கி நடிக்கும் புதிய படம்! | நானியுடன் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்த கீர்த்தி ஷெட்டி! | பார்க்கிங் பட தயாரிப்பாளருடன் இணையும் அர்ஜுன் தாஸ்! |
'அப்டேட்' என்ற வார்த்தையை அதிகம் பிரபலமாக்கியவர்கள் அஜித் ரசிகர்கள். அஜித் தற்போது நடித்து வரும் 'விடாமுயற்சி' படம் பற்றிய அப்டேட் எதுவும் வராமல் அவரது ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் இரண்டு வாரங்களில் மே 1ம் தேதியன்று அஜித்தின் பிறந்தநாள் வரப் போகிறது. அன்றாவது 'விடாமுயற்சி' படத்தின் அப்டேட் எதுவும் வருமா என்று அவர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள்.
முதல் பார்வை அல்லது முன்னோட்ட வீடியோ என்று ஏதோ ஒன்று வெளிவந்தால் மட்டுமே அஜித் ரசிகர்களைத் திருப்திப்படுத்த முடியும். போட்டியாளரான விஜய் நடிக்கும் 'தி கோட்' படத்தின் முதல் சிங்கிள் கூட வெளிவந்துவிட்டது. ஏட்டிக்குப் போட்டியாக ஏதாவது ஒன்று வந்தால் சிறப்பாக இருக்கும் என ரசிகர்கள் நினைக்கிறார்கள்.
'விடாமுயற்சி' படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்ற தகவலும் கூட அஜித் ரசிகர்களை வருத்தப்பட வைத்துள்ளது. எனவே, இந்த சூழ்நிலையில் மே 1 அப்டேட் வரவில்லை என்றால் அஜித் ரசிகர்கள் வருத்தப்படுவது உறுதி.