2025ல் காமெடிக்கு பஞ்சம்: தியேட்டரில் சிரிப்பு சத்தம் கேட்கல | அடுத்த படம் குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட தகவல் | 'டாக்சிக்' படத்தில் கங்காவாக நயன்தாரா! | திரிஷ்யம் முதல் பாகத்தின் பார்முலாவில் உருவாகும் 3ம் பாகம் : ஜீத்து ஜோசப் தகவல் | நடிகர் பிரித்விராஜின் தார்யா ஹிந்தி படப்பிடிப்பு நிறைவு | 'தி பெட்' படம், ஹீரோ ஸ்ரீகாந்த், ஹீரோயின் சிருஷ்டி புறக்கணிப்பு | விவாகரத்துக்கு பிறகும் ஒற்றுமையாக வலம் வரும் பிரியதர்ஷன் லிசி தம்பதி | ரஜினியின் அடுத்த பட இயக்குனர்?: நீடிக்கும் குழப்பம் | ரூ.50 கோடி வசூல் கிளப்பில் இணைந்த சர்வம் மாயா | கூட்ட நெரிசலால் கேன்சல் செய்யப்பட்ட ரேப்பர் வேடன் இசை நிகழ்ச்சி : ரயில் விபத்தில் பலியான ரசிகர் |

100 ஆண்டுகால பெருமை வாய்ந்தது தமிழ் சினிமா. எந்தாண்டும் இல்லாத அளவுக்கு இந்தாண்டு 285 படங்கள் வெளியீடு எனும் இமாலய சாதனையை படைத்துள்ளது. இத்தனை படங்கள் வந்தாலும் வெற்றி பெற்றது என்னமோ 12 சதவீதம் மட்டுமே. சுமார் 2000 ஆயிரம் கோடிக்கு மேல் நஷ்டம் அடைந்து இருக்கும். இந்த 2025ல் தமிழ் சினிமாவில் நிகழ்ந்த பல்வேறு விஷயங்களை ஒட்டுமொத்தமாக தொகுத்து வழங்கி உள்ளோம். அதுபற்றிய ஒரு ரீ-வைண்ட் இதோ...
ரிலீசில் ‛‛ரிகார்ட்''
தமிழ் சினிமா வரலாற்றில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்தாண்டில் தியேட்டரில் நேரடியாக 279 படங்களும், ஓடிடியில் 6 படங்கள் என மொத்தமாக 285 படங்கள் ரிலீஸாகி உள்ளன.

லாபம் தந்த படங்கள்
இந்த 285 படங்களில் ‛‛மத கஜ ராஜா, குடும்பஸ்தன், டிராகன், குட் பேட் அக்லி, டூரிஸ்ட் பேமிலி, மாமன், தலைவன் தலைவி, கூலி, பைசன், டியூட்'' ஆகிய 10 படங்கள் மட்டுமே அனைத்து தரப்பினருக்கும் லாபம் தந்தன.

சுமாரான வெற்றி
விமர்சன ரீதியாகவும், ஓரளவு வசூலை பெற்ற படங்களாக ‛‛வீர தீர சூரன் 2, மர்மர், லெவன், மார்கன், மெட்ராஸ் மேட்னி, பறந்து போ, 3 பிஹெச்கே, மாரீசன், ஹவுஸ் மேட்ஸ், சக்தித்திருமகன், ஆர்யன், மிடில் கிளாஸ், ஏமகாதகி, ஆண்பாவம் பொல்லாதது, அங்கம்மாள், கடைசி வாரமாக வெளியான சிறை'' ஆகியவை உள்ளன.
ஏமாற்றிய தக் லைப்
இந்த ஆண்டின் மாபெரும் தோல்விப் படமாக 'தக் லைப்' அமைந்தது. மணிரத்னம் இயக்கத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில், கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா மற்றும் பலர் நடிப்பில் வெளியான இப்படம் இப்படி ஒரு தோல்வியைத் தழுவும் என யாரும் எதிர்பார்க்கவில்லை.

இதேப்போல் அஜித்தின் விடாமுயற்சி, சூர்யாவின் ரெட்ரோ, சிவகார்த்திகேயனின் மதராஸி படங்களும் தோல்வியை தழுவின.
12 ஆண்டுகளுக்கு பின்...
இந்தாண்டின் முதல் வெற்றி படம் பொங்கலை முன்னிட்டு வெளியான ‛மத கஜ ராஜா'. 12 ஆண்டுகளாக தேங்கி கிடந்த படம் 50 கோடி வசூலை கடந்தது.
அதிக வசூல்
கூலி (600 கோடி), குட் பேட் அக்லி (200 கோடி), டிராகன் (150 கோடி), விடாமுயற்சி (100 கோடி), டியூட் (100 கோடி), மதராஸி (100 கோடி), தலைவன் தலைவி (100 கோடி)
100 கோடிக்கு கீழ் வசூல்
மத கஜ ராஜா, டூரிஸ்ட் பேமிலி, பைசன், தக் லைப், ரெட்ரோ,
அதிக லாபம்

2025ல் அதிக லாபத்தை தந்த படமாக பிரதீப் ரங்கநாதனின் 'டிராகன்' அமைந்தது. 30 கோடி செலவில் தயாராகி 150 கோடி வசூலை தந்தது. மற்றொரு படமான சசிகுமாரின் ‛டூரிஸ்ட் பேமிலி' 10 கோடி பட்ஜெட்டில் உருவாகி 90 கோடி வசூலித்தது.
ஆரம்பமே வெற்றி

அறிமுகப் படத்தில் வெற்றியைக் கொடுத்த இயக்குனர்களாக ராஜேஷ்வர் காளிசாமி (குடும்பஸ்தன்), அபிஷன் ஜீவிந்த் (டூரிஸ்ட் பேமிலி), கீர்த்தீஸ்வரன் (டியூட்), கலையரசன் தங்கவேல் (ஆண்பாவம் பொல்லாதது), சிறை (சுரேஷ் ராஜகுமாரி) ஆகியோர் உள்ளனர்.
விஜய்க்கு நோ

விஜய் நடிப்பில் இந்தாண்டு ஒரு படம் கூட வெளியாகவில்லை. தீவிர அரசியலில் இறங்கியதால் சினிமாவை விட்டு விலகும், அவரது கடைசி படமாக 'ஜனநாயகன்' 2026, ஜன., 9ல் வெளியாகிறது.
யார் அதிகம் (தமிழ் மட்டும்)
இசை : ஜிவி பிரகாஷ் குமார்
8 படங்கள் - வணங்கான், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், கிங்ஸ்டன், வீர தீர சூரன் 2, குட் பேட் அக்லி, படையாண்ட மாவீரா, இட்லி கடை, மாஸ்க்)
இயக்கம் : தனுஷ், சுந்தர்சி
தனுஷ்: 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், இட்லி கடை'சுந்தர் சி: 'மதகஜராஜா, கேங்கர்ஸ்'

நடிகர்
விமல் - படவா, பரமசிவன் பாத்திமா, தேசிங்கு ராஜா 2, மகாசேனா,
நடிகை
திரிஷா : விடாமுயற்சி, குட் பேட் அக்லி, தக் லைப்
நித்யா மேனன் : காதலிக்க நேரமில்லை, தலைவன் தலைவி, இட்லி கடை
விவாகரத்து
ஜிவி பிரகாஷ் சைந்தவி தம்பதி சட்டப்படி விவாகரத்து பெற்றனர்.
ஆங்கில மோகம் தலைப்பு (80க்கும் மேற்பட்ட படங்கள்)
“பயாஸ்கோப், லாரா, சீசா, எக்ஸ்ட்ரீம், மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங், ரிங் ரிங், 2 கே லவ் ஸ்டோரி, 9 எஎம் டூ 9 பிம், பேபி & பேபி, பயர், டிராகன், ஜென்டில்வுமன், கிங்ஸ்டன், லெக்பீஸ், மர்மர், டெக்ஸ்டர், ராபர், ஸ்வீட்ஹார்ட், அஸ்திரம் தி சீக்ரெட், ஓஜா, ட்ராமா, டோர், மிஸ்டர் பெர்பெக்ட், இஎம்ஐ, குட் பேட் அக்லி, டென் ஹவர்ஸ், கேங்கர்ஸ், சுமோ, ரெட்ரோ, டூரிஸ்ட் பேமிலி, கீனோ, டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல், லெவன், ஏஸ், ஸ்கூல், ஜின் தி பெட், தி வெர்டிக்ட், தக் லைப், மெட்ராஸ் மேட்னி, கட்ஸ், ஹோலோகாஸ்ட், சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ், டிஎன்ஏ, குட் டே, லவ் மேரேஜ், 3 பிஹெச்கே, பீனிக்ஸ், மிஸஸ் & மிஸ்டர், ஓஹோ எந்தன் பேபி, பன் பட்டர் ஜாம், சென்ட்ரல், டிரென்டிங், 2 கே ஹார்ட், அக்யூஸ்ட், ஹவுஸ்மேட்ஸ், மிஸ்டர் ஜு கீப்பர், சரண்டர், ரெட் பிளவர், கூலி, சினிமா பேய், கிப்ட், பேட் கேர்ள், பிளாக் மெயில், பாம், யோலோ, கிஸ், ரைட், ராம்போ, வில், பைசன், டீசல், டியூட், த இன்வெஸ்டிகேஷன், மெசேஞ்சர், அதர்ஸ், பாய் ஸ்லீப்பர் செல், மெட்ராஸ் மாபியா கம்பெனி, மாஸ்க், மிடில் கிளாஸ், யெல்லோ, ரஜினி கேங், பிபி 180, ப்ரைடே, இந்தியன் பீனல் லா, ரிவால்வர் ரீட்டா, கேம் ஆப் லோன்ஸ்.
32 ஆண்டுகளுக்கு பின்
80களில் வெற்றி படங்களை இயக்கிய கே. ரங்கராஜ், 32 ஆண்டுகளுக்கு பிறகு இயக்கிய 'கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்' படம் வெளியாகி வந்த சுவடே தெரியாமல் போனது.
திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுத்த 'ஊமை விழிகள்' படப் புகழ் அரவிந்த்ராஜ் 15 வருட இடைவெளிக்குப் பிறகு 'தேசிய தலைவர்' படத்தை இயக்கினார்.
பார்ட் 2 படங்கள்
வீர தீர சூரன் 2, தேசிங்கு ராஜா 2, கும்கி 2
சூரிக்கு வெற்றி

காமெடி நடிகர்களாக இருந்து நாயகர்களாக மாறிய சந்தானத்தின் 'டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்', யோகி பாபுவின் 'ஜோரா கைய தட்டுங்க', சூரியின் 'மாமன்' ஆகிய படங்கள் மே 16ல் வெளியானது. சூரி வெற்றி பெற்றார்.
ஓடிடி ரிலீஸ்
நேரடியாக ஓடிடியில் ‛டெஸ்ட், ராம்போ, டியர் ஜீவா, ஸ்டீபன், உன் பார்வையில்' ஆகிய படங்கள் வெளியாகின.
யுடியூப் ரிலீஸ்
கந்தன் மலை
இயக்குனர்களாக...
தயாரிப்பாளர் சஷிகாந்த், நடிகை வனிதா ஆகியோர் முறையே ‛டெஸ்ட்', 'மிஸஸ் & மிஸ்டர்' படங்களை இயக்கி, இயக்குனராக களமிறங்கினர்.

முன்னணி இயக்குனர்களில் மணிரத்னம், பாலா, சுந்தர் சி, ஏஆர் முருகதாஸ், விஷ்ணு வர்தன், லோகேஷ் கனகராஜ் ஆகியோர் இயக்கிய படங்கள் இந்த ஆண்டில் வெளியாகின. நிறைய புதுமுக இயக்குனர்கள் இந்த ஆண்டில் அறிமுகமானார்கள்.
நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா 'பீனிக்ஸ்' படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
பிறமொழி படங்களால் லாபம்
கன்னட படமான ‛காந்தாரா 2' உலகளவில் 900 கோடி வசூலித்து இந்தாண்டில் அதிக வசூலை குவித்த 2வது இந்திய படமாக அமைந்தது. தமிழகத்திலும் இப்படம் சுமார் 50 கோடி வரை வசூலித்து லாபம் தந்தது.
அதேப்போல் அனிமேஷன் படமான மகாவதார் நரசிம்மா பான் இந்தியா வெளியீடாக வந்து 325 கோடி வசூலித்தது. தமிழகத்திலும் குறிப்பிடத்தக்க வசூலை குவித்தது.

இவைகள் தவிர்த்து கல்யாணி பிரியதர்ஷன் முதன்மை வேடத்தில் நடித்து வெளியான ‛லோகா சாப்டர் 1', உலகளவில் ரூ.260 கோடி வசூலித்து மலையாள சினிமாவில் அதிக வசூலை குவித்த படமாக அமைந்ததுடன் கதை நாயகியாக நடித்து இவ்வளவு வசூலை குவித்தது இவர் மட்டுமே. தமிழகத்திலும் குறிப்பிடத்தக்க லாபத்தை தந்தது.
மேலும் ஹாலிவுட் படங்களான ‛எப் 1, ஜுராசிக் வேர்ல்டு ரீ-பெர்த் உள்ளிட்ட படங்களும் தமிழகத்தில் வசூலை பெற்றன.
ரீ ரிலீஸ்
எந்தாண்டும் இல்லாத அளவுக்கு இந்தாண்டில் ரன், ப்ரெண்ட்ஸ், குஷி, நாயகன், பையா, அட்டகாசம், அஞ்சான், ஆட்டோகிராப், அண்ணாமலை, படையப்பா என ஏகப்பட்ட படங்கள் ரீ-ரிலீஸாகின.
சர்ச்சை
* குட் பேட் அக்லி, டியூட் போன்ற படங்களில் இளையராஜாவின் பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதாக கூறி சர்ச்சையாகி கோர்ட் வரை சென்றது.
* தமிழில் இருந்து தான் கன்னடம் பிறந்தது என கமல் பேசியது சர்ச்சையாக அவரின் தக் லைப் படம் கன்னடத்தில் வெளியாக பிரச்னை எழுந்தது.
* பேட் கேர்ள் படம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை அவமதிப்பதாக கூறி சர்ச்சை எழுந்தது.
* நடிகரும், சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ், ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவை ரகசிய திருமணம் செய்து ஏமாற்றியதாக வழக்கு நடக்கிறது.

* நடிகை லட்சுமி மேனன் போதையில் ஒரு நபரை கடத்தி அடித்ததாக அவர் மீது வழக்கு பதிவானது
* 2017ல் மலையாள நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நடிகர் திலீப் குற்றமற்றவர் என கூறி விடுதலை செய்யப்பட்டார்.
1000 கோடி
இந்தாண்டில் இந்திய அளவில் அதிக வசூலை, அதுவும் 1000 கோடி வசூலை குவித்த படமாக ஹிந்தியில் வெளியான ரன்வீர் சிங்கின் துரந்தர் படம் அமைந்தது.